Header Ads



Jaffna Muslim இணையம் நடாத்திய போட்டியில், வெற்றியீட்டியவர்கள் பணப் பரிசில்களை பெற்றுக்கொள்ளலாம்

வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் இணையம் நடாத்திய, மாபெரும் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா  அச்சுறுத்தல், ஊரடங்குச் சட்டம், தொழில் இன்மை, பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் எடுத்து, போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை உடனடியாக வழங்க ஜப்னா முஸ்லிம் இணையம் தீர்மானித்துள்ளது.

வெற்றியீட்டியவர்கள் பற்றிய விபரத்தை ஏற்கனவே நாம், பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில் அதனை மீண்டும் கீழே குறிப்பிடுகிறோம். 

இங்கு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆதாரத்தை காண்பித்து, 0777588379 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, தமது  பணப்பரிசில்களை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

காலச் சூழ்நிலைகள் ஒத்து வருகையில், போட்டியாளர்கள் எழுதிய கட்டுரைகள் நூலுருவாக்கம் செய்யப்பட்டு, வெளியிட்டு வைக்கப்படும் என்பதையும் அறியத் தருகிறோம்.


2 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.