May 10, 2020

இப்படியெல்லாம் செய்யாதீர்கள் - Dr சுகுணன் அறிவுரை

- பாறுக் ஷிஹான் -

பள்ளிவாசல்களின் அருகே விஷேடமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருப்பது சில வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் முட்டி மோதுவது சிலர் பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது போன்ற செயற்பாடுகளில் ஒன்று கூடுவது அவ்வளவு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை   என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட  கொரோனா வைரஸ் தொடர்பில்  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல்  இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,

நாளை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்து வதற்கான அறிவிப்புகள் வந்த நிலையில் எமது கல்முனைப் பிராந்தியத்தை பொருத்தளவில் இதுவரை காலமும் நாங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஒருமைப்பாட்டுடன் பல விடயங்களை பல நபர்களை ஒன்றிணைத்து இன்றுவரை பாதுகாப்பாக இருக்கின்றோம். இருந்தாலும் நாளைய தினம் சுமுக நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு அரசாங்கத்தினால் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மக்கள் சாதகமான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கட்டுப்பாடு அல்லது சுகாதார அறிவுறுத்தல்களை உடைத்து விடக் கூடாது. இதனை உடைத்து விடுவோம் ஆனால் இன்றுவரை அனைவரும் எமது வீரர்களை சிந்தி உழைத்தது வீணாகிப் போய்விடும் ஆகவே மக்கள் கொவிட் 19 தொற்று பரம்பலை உறுதியாக விளங்கிக் கொண்டவர்களாக தமது கட்டுப்பாடுகளை எந்தவித தளர்வும் இல்லாமல் இதனை மேற்கொண்டு செல்ல வேண்டும்.

உண்மையில் சில விடயங்கள் நமக்கு சவாலாக காணப்படுகின்றது. ஏனென்றால் இரண்டு மாத காலமாக மக்களை வீட்டுக்குள் அடங்கி இருப்பது என்பது சாத்தியம் குறைந்த ஒரு விடயம் ஆனாலும் இந்தக் கொடிய நிலையை அடைந்து கொண்டவர்களாக மக்கள் நடந்து கொள்ள வேண்டும் சில சமயங்களில் நான் கண்டிருக்கின்றேன் சிலர் வீதிகளில் உலா வருகின்றனர் பள்ளிவாசல்களின் அருகே விஷேடமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருப்பது சில வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் முட்டி மோதுவது சிலர் பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது போன்ற செயற்பாடுகளில் ஒன்று கூடுவது அவ்வளவு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை பெற்றோர்களும் பிள்ளைகளும் இதனை புரிந்து கொண்டு  எங்களுடன் இணைந்து போராடினால் தான் பாரதூரமான விட்டு விலகி தொற்று அற்ற பிராந்தியமாக அடையாளப்படுத்த முடியும் என கூறினார்.

5 கருத்துரைகள்:

பள்ளிகளில் வெள்ளிக்கிழமைகளில் சனம் கூடுவது உங்களது கண்ணில் பட்டதா அல்லது இனரீதியான மனப்பதிவா?

பள்ளிவாசல் அருகில்?????
எங்கே??
மனதின் பிரம்மையோ அல்லது ஈனப்பதிவோ?

@Mohamed Lafir - டொக்டர் ஐயா அவரகள் சொல்வது உண்மைதானே. ஏன் வெட்டிப் பேச்சு. டொக்டர் அவரகள் அல்ல. நீங்கள்தான் இனரீதியாக பதிவிடுகின்றீர்கள்.

தயவு செய்து அவர் கூறும் விடயத்தை கவனியுங்கள்.
பள்ளி வாயல் அருகில் மக்கள் கூடி நின்றதை கண்டிருக்கலாம் அல்லது யாராவது அவரின் வெளிக்கள உத்தியோகர்கள் தெரிவித்திருக்கலாம்.
ஆராயாமல் பதிவிட வேண்டாம்.

ஏன் எல்லோரையும் இனவாதிகளாகப் பார்க்கிறீங்க?

Post a Comment