Header Ads



எங்களை உங்கள் அரசியல், சர்ச்சைகளுக்குள் இழுக்காதீர்கள் - Dr அனில் வேண்டுகோள்

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளிற்குள் இழுக்கவேண்டாம் என பொதுமக்களையும் அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க எதிர்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் மத்தியில் விவாதங்களை முன்னெடுக்கலாம் ஆனால் தயவு செய்து எங்களை அதற்குள் இழுக்காதீர்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்காக சேவையாற்றிய என்னை போன்ற அரசாங்க ஊழியர்கள் எந்த கட்சியையும் சார்ந்து செயற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசாங்கங்களாலும் நாங்கள் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் ஆனால் அவர்களிடமிருந்து விலகி ஓடியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்து செயற்படாத எங்களை போன்ற அதிகாரிகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளை தங்களால் முன்னெடுக்க முடியும் என்றே ஜனாதிபதியின் செயலாளருக்கான தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தான் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினை வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன் இந்த வர்த்தமானி விதிமுறைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்கள் அதனை உணரச்செய்யவேண்டும் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இல்லாவிடில் இன்னும் மூன்று வாரங்களில் பாரிய நோய்பரவல் உருவாகலாம் தேர்தலை நடத்த முடியாமல் போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வைரசினை கட்டுப்படுத்தி விட்டோம் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது என நான் தெரிவிக்கவில்லை ஆனால் தற்போது போன்று நாங்கள் செயற்பட்டால் ஏனையநாடுகளை விடஎங்களால் வைரசினை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. This should especially apply to pour Muslim politicians like Azad Sally, Mujeebu Rahuman, Rauf Hakeem and others who are always picking on the Health Authorities, the Armed Forces, Police & PHI's who have been and are doing a "Yoeman's" service in helping our country stop the spreading of this vicious virus among our people. The President and the Government should bring in laws to punish these politicians severely if they continue to do this when assredding the media, their arranged press conferences and when facing TV cameras. The PENALTIES should be very hard ones.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. That's what we request you Dr.Jasinghe - Please, Please don't politicise the noble profession.

    ReplyDelete
  3. Noor Niz aam Pro-Agent of Vimal veeravansa & co same like Mu za mmil???

    ReplyDelete

Powered by Blogger.