Header Ads



தேர்தல் தொடர்பான இன்றைய, உயர்நீதிமன்ற விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (18) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.