Header Ads



சிலாபத்தில் ஜெபக் கூட்டம், நடத்திய போதகர்

சிலாபம் மாரவில நகரில் சிலரை ஒன்றுக் கூட்டி பிரார்த்தனை ஜெபக் கூட்டத்தை நடத்திய கிறிஸ்தவ போதகருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மஹாவெவ சுகாதார பரிசோதகர் பீ.எம்.வஜிர நிலந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஜெபக் கூட்டம் இன்று -16- மதியம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாரவில பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

மாரவில நகரில் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இந்த ஜெபக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு நான்கு சிறுவர்களுடன் 18 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் என 27 பேர் கூடியிருந்ததாகவும் நிலந்த குறிப்பிட்டுள்ளார்.

ஜெபக் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பலர் முக கவசங்களை அணிந்திருக்கவில்லை. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இவ்வாறு கூட்டத்தை கூட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இப்படியான நிலைமையில், குறித்த போதகவர் பல முறை ஜெபக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட போதகர் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி ஜெபக் கூட்டம் ஒன்றை நடத்தியமை தொடர்பாக மாரவில நீதிமன்றத்தில் வழக்கொன்று சிலுவையில் உள்ளது எனவும் பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.