Header Ads



நடுக்கடலில் சிக்கியுள்ள, சொகுசுக் கப்பல்கள்- பரிதாப நிலையில் ஊழியர்கள்

அமெரிக்கா அருகே 102 சொகுசு கப்பல்களும் சுமார் 70 ஆயிரம் ஊழியர்களும் கொரோனாவால் கரை சேர முடியாமல் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில கப்பல்களில் உள்ள ஊழியர்களுக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் காணப்படுகின்றன, ஆனால் பெரும்பாலான கப்பல்களில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் மாகாண நிர்வாகங்களும் பெடரல் நிர்வாகமும் ஒருமித்த முடிவுடன் உள்ளதாகவும்,

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டே கப்பல் ஊழியர்களை வெளியேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளை சேர்ந்த இந்த 102 கப்பல்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சிக்கியுள்ளதாகவும்,

சிலர் கொரோனாவுக்கு இலக்கானதாகவும், சிலர் மரணமடைந்துள்ளதாகவும், பலருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு துறைமுகம் அருகாமையிலும் சிக்கியுள்ள கப்பல்களின் நிலை தொடர்பில் தகவல் தெரியவில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்த கப்பல்களில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்ட அரசாங்கம், ஊழியர்களை கொரோனா பரவல் பெயரில் தவிக்க விட்டுள்ளது என சொகுசு கப்பல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.