Header Ads



மாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்

இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு நிலையில் அன்பளி;ப்பாக வழங்கப்படும் 1500 ரூபாயை பெறுவதற்கான நெரிசல் காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

முஸ்லீம்களின் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் உதவியை பெறுவதற்காக வர்த்தகர் ஒருவரின் களஞ்சியசாலைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்

.அந்த கட்டிடத்தின் கதவுகள் திறக்கப்பட்டவேளை அந்த 1500 ருபாயை பெறுவதற்கு மக்கள் முண்டியடித்தனர் என தெரிவித்துள்ள அவர் இது அவர்கள் நாளாந்தம் உழைக்கும் சம்பளத்தின் அளவு எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் வரிசையில் நின்றிருந்தனர் சிலர் வரிசையை குழப்பிக்கொண்டு முன்னே செல்ல முயன்றனர் என அவர் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.
அவ்வேளையே அந்த வரிசையில் முன்னால் நின்றுகொண்டிருந்த பெண்கள் கீழே விழுந்தனர்,ஏனையவர்களால் மிதிக்கப்பட்டனர் என முஜிபூர் ரஹ்மான் ஏஎவ்பிக்கு ரிவித்தார்.

வைரஸ் முடக்கல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் எந்த பணத்தையும் உழைக்கவில்லை என குறிப்பிட்ட அவர் மக்கள் மிகவும் ஆற்றவொணா நிலையிலிருந்தனர்,இங்கு பணம் வழங்கப்படுகின்றது என்பதை கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கில் திரண்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முடக்கல் விதிமுறைகளை மீறியமைக்காக வர்த்தகரும் மேலும் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்தார்.
வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள 5.14 மில்லியன் மக்களிற்கான அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிதி உதவி காரணமாகவும் கிராமங்களில் குழப்பமான நிலைகள்ஏற்பட்டுள்ளன.

3 comments:

  1. So you basically put the blame on the govt not on those who didn't follow any instructions while distributing money. Don't make political statements on this incident.

    ReplyDelete
  2. NEE INDA SHANDARPATHILUM ARASHIYAL LAAPAM THEDUKINRA ORU KEELTHARAMAANAVAN
    ENPATHAI ARIYA MUDIKIRATHU.

    UNNUDAYA ARASHANGAM, DIGANA UTPADA PALA
    IDANGALIL, MUSLIMGALAI KOLAISHEITHU,
    PORUTKALAI SHOORAIYADI, VIYAPARANGALUKKU, THEEYITTU, 1000 KODI
    RUPAIKU MEL NASHTAM ETPADUTHIYAPOTHU
    THOOKKATHIL IRUNDEEYA.
    INDA SHAMBAVANGALUKKU MULU PORUPPAIYUM
    UNNUDAYA ARASHANGAM ETKAVENDUM ENRU
    SHOLLIVITTU, THAPPITHUKONDAVAN NEE.

    ReplyDelete
  3. This is absolutely the Bai's problem.... pls blame his/ their proud by not following the rules & regulations. He should know what is going on in this country not always thinking by his/ their money only...
    Very simply he could arrange the donations by visiting each and every poor family...by the guidance of security personals....

    ReplyDelete

Powered by Blogger.