Header Ads



கல்முனையில் அமைதியான நோன்புப் பெருநாள்


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

கல்முனைப்பிரதேசத்தில் இன்றைய நோன்புப்பெருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கல்முனை சாய்ந்தமருது மருதமுனை மற்றும் நட்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இன்றைய ஊரடங்குச்சட்டத்தை மதித்தும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் மிகவும் அமைதியான முறையில் பெரு நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.நோன்புப்பெருநாள்  வழமை 

மை போன்று  இம்முறை பள்ளிவாயல்களிலோ திறந்த வெளிகளிலோ அல்லது மைதானங்களிலோ.தொழுகைகள் நடத்தப்பட்டவில்லை பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதே வேளை பள்ளிவாயல்களில் தக்பீர் சொல்லப்பட்டதுடன் ஊரடங்குச்சட்டத்தை மதித்து நடக்குமாறும் யாரும் வீண்விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அடிக்கடி அறிவிப்புச்செய்யப்பட்டுக்கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.

No comments

Powered by Blogger.