Header Ads



இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படக்கூடாது, இன ஒற்றுமையுடன் வாழ ஒன்றுபட வேண்டும்

இனவாதங்களைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படக்கூடாது, இன ஒற்றுமையுடன் அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இனவாதத்தை வளர்த்து விட்டு, அதில் குளிர்காய எவரும் முற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும் இனவாதச் செயற்பாடுகளுக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் , மூவின மக்களும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்வதே அரசின் விருப்பம் எனவும், இனவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைத் தக்க வைப்பது அரசின் நோக்கமல்ல எனவும் அவர் கூறியுள்ளார்

உண்மையான இனவாதிகளை மக்கள் முன்னிலையில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் குறிக்கோள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

5 comments:

  1. surprise taliking bullshit,
    coming election , person acting , after election have chance againt muslim community increasing prize , srilankan should avoid person

    ReplyDelete
  2. What he means is Election is going to come soon definitely. He had been mum about Derena and Hiru all these days and suddenly he talks about inter racial relationships.

    ReplyDelete
  3. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றாரா இந்த 'பெரிய' மனிதர்.

    ReplyDelete

Powered by Blogger.