Header Ads



அன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...!

உலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்ட ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.பலர் தொழில்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர், மேலதிக கொடுப்பனவுகள் இல்லை,சம்பளம் குறைப்பு/சம்பளம் வழங்காமை,கட்டாய விடுமுறை,வேலை நாற்கள்/வேலை நேரங்கள் குறைக்கப்பட்டு அதற்கமைய ஊதியத்தை வழங்குதல் என அடுக்கிக்கொண்டு செல்லாலம்.குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் நிமிர்த்தம் சென்று வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நாட்டிற்கு அணுப்பும் பணமே இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பிரதான வருமானமாக அமைகின்றது.இதில் குறிப்பாக மத்திய கிழக்கில் பல இலட்சக்கணக்கான இலங்கையர்கள் தொழில் நிமிர்த்தம் வாழ்கிறார்கள்.

பலர் தொழில்களை இழந்த பாதிப்புகளுடன் தினம்தோறும் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்ற புதிய Covid-19 நோயாளிகள் எண்ணிக்கை போன்றவை தமது இருப்பீடங்களில் முடங்கி இருப்பவர்களுக்கு அதிக மனம் அழுத்தத்தை தருகிறது(Stress). தமது/நண்பர்கள்/உறவினர்களின்திருமணம், பரீட்சைகள், சுற்றுலா,பெருநாள் என பல்வேறு கற்பனைகளுடன் கனவுகளில் மிதந்தவர்களுக்கு விமானநிலையங்களின் முடக்கம் இன்னும் அதிகம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொழில்களை இழந்து தமது இருப்பிடத்திற்கும்,உணவு தேவைக்கும் சவாலாக வாழும் நிலையில் தமது நாடுகளில் இருந்து குடும்பங்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,சமூக அமைப்புகள் போன்றவற்றிலிருந்து இந்த காலப்பகுதியில் கேற்கப்படும் உதவிகளுக்கு பதில் சொல்ல முடியாத கவலை என மனவேதனையும் இக்காலங்களில் அதிகம்.

தாம் வேலை செய்யும் கம்பனி/நண்பர்கள்/இருப்பிடங்களில் உள்ளவர்களுக்கு Covid-19 தொற்று என அடையாளப்படுத்தப்பட்டால் எனக்கும் இந்த நோய் வந்துவிடும் என தேவையில்லாத அச்சம் கொள்கிறார்கள்.இந்த நோயுடன் சம்பந்தமில்லாத வேறு அறிகுறிகளை எல்லாம் Covid-19 உடன் முடிச்சுபோட்டு அவர்களே தமக்கு தாமே Corona வந்துவிட்டதாக கூறி தமது நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.

நேற்றைய தினம்(25-05-2020) ‘இலங்கை சேர்ந்த கத்தாரில் 25 வயது இளைஞனின் திடீர் மரணம் ,கடந்த ஏழு நாற்களில் குவைத்தில் மூன்று இலங்கையர்கள் குறிப்பாக இளைஞர்கள் மரணம் இதில் இருவருக்கு Corona என்ற செய்தி’ மத்திய கிழக்கில் வாழும் பலரை அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.  முஹம்மது றிஸ்வான் இலங்கை அம்பாறையை சேர்ந்தவர் எதிர்வரும் 30ம் திகதி திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது. எவ்வளவு கற்பனைகளுடன் கனவுகளுடன் வாழ்ந்திருப்பார்.Corona எல்லா திட்டங்களையும் தகர்த்துவிட்டது.கடந்த ஞாயிறு பெருநாள் அன்று இரவு தூங்கியவர் நேற்றைய தினம் நீண்ட நேரம் விழிக்காததால் நண்பர்கள் மூலம் அவசர சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி பின்னர் மரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.மரணித்திற்கான காரணமாக திடீர் மாரடைப்பு(Heart Attack) என வழங்கப்பட்டுள்ளது.

வழமையாக நாம் வழங்கும் இலவச வைத்திய ஆலோசனையை விட இந்த Covid-19 காலத்தில் பலர் எம்மை தொடர்பு கொள்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலானவர்களின் Corona சம்பந்தமாக தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துகொண்டு உளவியல் ரீதியான பதிப்புகள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.கத்தாரில் 28 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.இதில் 24 இலட்சம் பேர் வெளிநாட்டவர்கள்.இதுவரை 196411நபர்கள் Covid-19 சோதனைக்கு உற்படுத்தப்பட்டு 47207 பேர் நோயாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

11844நபர்கள் நோயிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் 28பேர் இறந்துள்ளார்கள்.

உலகளாவிய ரீதியில் Covid-19 தொற்று மூலம் இறப்பவர்களின் வீதம் 6% இருக்கின்ற போது கத்தாரில் வெறும் 0.06% ஆகும்.இதன்படி பத்தாயிரம் பேருக்கு நோய் ஏற்பட்டால் வெறும் 6 பேர் மாத்திரமே மரணிப்பார்கள்.இந்த மரணங்களும் பெரும்பாலும் இளம் வயதிலுள்ளவர்களுக்கு ஏற்படுவது மிக மிக குறைவு.கத்தாரில் இலங்கையர்கள் 140000 நபர்கள் உள்ளனர்.இதுவரை இலங்கையர் 1051 பேருக்கு Covid 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இங்குள்ள மொத்த சனத்தொகையில் Covid-19 தொற்று 1.7% ஆக காணப்பட்ட போதும் இலங்கையர்களின் தொற்று இங்குள்ள இலங்கையர்களின் மொத்த சனத்தொகையில் 0.75% ஆகும்.இறப்பு வீத அடிப்படையில் கத்தாரிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கு Corona தொற்றுக்கு உள்ளடக்கப்பட்டாலும் மொத்தமாக 72 நபர்கள் இறக்க நேரிடும்.இந்த புள்ளிவிபரவியல் மிகப்பெரிய ஆறுதலை தருகின்றது.

Coronaவினால் ஏற்படும் மரணத்தை விட தினம் தினம் அதை நினைத்து அதிக மன அழுத்தம்(Stress) காரணமாக வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துவிடும்.உலகில் ஏற்படும் மாரடைப்பில் அதிகளவு திங்கள் கிழமை காலையில் நடைபெறுவதாக புள்ளிவிபரவியல் கூறுகிறது.இதற்கு காரணம் பல நாடுகளில் வார இறுதி விடுமுறை கழிந்து திங்கள் அலுவலகம் செல்லும்போது பல்வேறுபட்ட பிரச்சனைகளை எண்ணி ஏற்படுகின்ற மன அழுத்தமாகும்.

இதை தவிர வியாபரிகளுக்கு வார முதல் நாளில் Bank,Cheque என பல்வேறுபட்ட அழுத்தங்களும் காரணங்களாக அமைகிறது.எனவே இருக்கும் காலங்களில் எமது மனநிலையை மாற்றி சந்தோசமாக இருப்போம்.Covid-19 எமது தனிப்பட்ட பிரச்சனை அல்ல.சர்வதேச ரீதியாக எல்லோரும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு மேலுள்ளவர்களின் வாழ்க்கையை ஒப்பிடாமல் நம்மை விட அதிகம் பிரச்சனையிலுள்ளவர்களை நினைத்து சந்தோசப்படுவோம். இறைவன் ஒவ்வெருவருக்கும் அவர்களுக்கு தாங்க முடியாத அளவு சோதனையை ஏற்படுத்துவதில்லை. வாழும் காலத்தில் நாமும் சந்தோசமாக வாழ்ந்து அடுத்தவர்களையைம் சந்தோசப்படுத்துவோம். Covid-19 சம்பந்தமாக உங்கள் சந்தேகங்களுக்கு குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க நாம் தயாராக உள்ளோம்.

குறிப்பு:#நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் சில உணவு வகை மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.Kiwi,Blueberry,Olive, Salmon fish,பாதாம்,பிஸ்த்தா போன்றவை அதிகம் கிடைக்கும்.எமது நாட்டை விட விலை குறைவு.

***#Covid-19 வைரஸ் இதுவரை அதனது கட்டமைப்பை பலவகைகளாக மாற்றியுள்ளது(Genomic Mutation).ஒவ்வெரு நாடுகளிலும் அதனது தாக்கத்தின் உக்கிரம்,பாதிப்பை ஏற்படுத்தும் நோயாளிகளின் வயது என்பன மாறுபடும்.எனக்கு சிறிய வயது/எந்தவித நோயும் இல்லை என அலட்சியமாக இருந்து மருத்துவ ,அரசினதும் ஆலோசனைகளை மீறாதீர்கள்.உங்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுவதோடு யாரோ ஒருவரின் அப்பாவி தாய்/தந்தையின் மரணத்திற்கு நீங்கள் காரணமாக அமையலாம்.

நன்றி

Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.

1 comment:

  1. Thank you for the advise. When stress and aniety control a person symptoms similar to covid - 19 may appear. During quarantine people took lot of lemon and citric acid food and so on as a measure of imcreasing immunity, on otherhand these food made already gastritic symtomatic patients to deteriorate their condition and caused symptoms like persistant caugh, chest tightness, cold like symtoms, throat pain and lawgrade fever and those symptoms are similar to covid -19, so what is more important to increase our immunity is to eradicate our stress and anxiety, and physically and psychlogically fit before we face the true covid-19. We can discuss with prof. doctors about our symptoms before we make our own assumtion on covid-19. When we address these issue we can eliminate such segmention of people from unnecessary fear and guide them while all health and personal safety measures applies to everybody to protect ourself and others. Appreciate doctor's advise on this.

    ReplyDelete

Powered by Blogger.