Header Ads



கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நபிகளாரின் பண்புகளினால், கவரப்படவே உடனடியாக இஸ்லாத்தை ஏற்றார்

Aashiq Ahamed

ஸ்பானிஷ் பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான அமண்டா பிருயெரஸ் "ஏன் இஸ்லாம்: ஒரு பெண்ணாக, ஐரோப்பியராக, முஸ்லிமாக என்னுடைய வாழ்க்கைப் பயணம்" எனும் நூலை வெளியிட்டுள்ளார். இஸ்லாம் குறித்து அறிய விரும்பும் ஸ்பானிஷ் பெண்களுக்கான நூலாக இதனை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் அமண்டா.

"எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. 2004 மட்ரிட் நகர குண்டு வெடிப்புகளுக்கு பிறகு, ஸ்பெயினின் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க சொன்னது நான் சார்ந்த செய்தி நிறுவனம். ஆனால் முஸ்லிம்கள் குறித்து ஒன்றும் தெரியாமல் அவர்களை எப்படி அணுகுவது? ஆகையால் அவர்களின் நம்பிக்கை குறித்த நூல்களை தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். முஹம்மது நபியின் பண்புகள் என்னை வெகுவாக ஈர்த்தன.

பிறகு குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். இயற்கை குறித்த குர்ஆன் வசனங்கள் என்னை இறைவனை உணர வைத்தன. இஸ்லாம் எனக்கானது என்பதை உணர்ந்தேன். ஆரம்பத்தில் தனிமை கடினமாக தான் இருந்தது. ஆனால் இப்போது கணவர், குழந்தை என நிறைவான வாழ்க்கை அமைந்திருக்கிறது. ஸ்பெயினின் முஸ்லிம் சமுதாயம் நாளடைவில் பெரியதாகவும், வலுவானதாகவும் வளர்ந்து வருகின்றது. (இப்படியான நிலையில்) என்னுடைய புத்தகம் இஸ்லாம் குறித்து அறிய விரும்பும் ஸ்பானிஷ் பெண்களுக்கு உதவும் என நம்புகிறேன்" என்கிறார் அமண்டா.

வாழ்த்துக்கள் சிஸ்டர்.

செய்திக்கான ஆதாரம்: https://www.arabnews.com/node/1672256/lifestyle


2 comments:

Powered by Blogger.