Header Ads



அர்ப்பணிப்புடன் யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தை எம்மால்  வெற்றி கொள்ள முடியும் என  ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை.

ஆனால் எமது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையினால் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்க முடிந்தது.

இதற்காக யுத்தத்தில் அர்ப்பணிப்புடன் போராடிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கௌரவத்தை தெரிவித்துக் கொள்வதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் எவரும் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும் என்று நம்பவில்லை. எனினும் எமது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை என்பவற்றினால் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

இராணுவத்தில் 5200 வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர். சுமார் 3000 பேர் அங்கவீனமடைந்தனர். 15000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவ்வறான நிலையில் பெற்றுக்கொண்ட வெற்றியை கொண்டாட விரும்புகின்றோம்.

யுத்த வெற்றியைக்கொண்டாட விரும்புபவர்களுக்கும் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு அர்ப்பணிப்புடன் யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.