Header Ads



குத்ஸை மீட்டெடுத்த மாவீரர், ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி


- M S Abdul Hameed -

இன்றைய குத்ஸ் தினத்தில் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த மாவீரரை நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும். அவர்தான் #ஸுல்தான்_ஸலாஹுத்தீன்_அய்யூபி!

ஹத்தீன் யுத்தத்தில் அவர் சிலுவைக்காரர்களைத் தோற்கடித்து மாபெரும் வெற்றி கண்டு குத்ஸை மீட்டெடுத்தார். இதனால் 88 வருடங்களாக இஸ்லாமிய எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் வசமானது.

சிலுவைக்காரர்களின் கரங்களில் கட்டுண்டு கிடந்த நம்முடைய புனித பூமிகளை மீட்டெடுப்பதையே ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். அதே சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தார்.

"மஸ்ஜிதுல் அக்ஸா சிலுவைக்காரர்களின் கரங்களில் இருக்க நான் எப்படி சிரிக்க முடியும், எப்படி உணவையும் பானங்களையும் சுவைக்க முடியும்?" என்று அவர் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

'அல்லாஹ்வின் போர்வாள்' ஃகாலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய வரலாறு ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களையே மாபெரும் இராணுவத் தளபதியாகக் காண்கிறது.

இன்று யூதர்களின் கரங்களில் சிக்கிக் கிடக்கும் பைத்துல் முகத்தஸ்

வரலாற்றுத்_துளிகள்

2 comments:

  1. Ya Allah give us leaders like him..

    ReplyDelete
  2. இன்று யூதர்களின் கரங்களில் சிக்கிக் கிடக்கும் பைத்துல் முகத்திஸை மீட்பவர், ஈரானில் ஏற்கனவே பிறந்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.  முஸ்லிம்களின் அதிகரித்த ஈமானியப் பலமே விரைவாக்கும் இதன் சாத்தியத்தை.

    ReplyDelete

Powered by Blogger.