Header Ads



இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - தூக்கத்திலிருந்து எழும்பி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்த மக்கள்


இன்று -06- மாலை கிழக்கு இந்தோனேசியாவின் கிசார் தீவில்  6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் போது உறங்கிக்கொண்டிருந்த இந்தோனேசிய மக்கள் தூக்கத்திலிருந்து எழும்பி, வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந் நிலநடுக்கம் பண்டா கடலில் 6.9 ரிச்டர் அளவில் உருவாகியதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 73 மைல் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தினால் கணிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சுனாமியைத் தூண்டும் அளவுக்கு இது சக்திவாய்ந்ததாக இல்லை என்று இந்தோனேசியா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.