Header Ads



கொவிட் அனர்த்தத்தில் நமது குழந்தைகள், பற்றிய சில முக்கிய குறிப்புக்கள்

 கொவிட் அனர்த்தத்தில் நமது குழந்தைகள், பற்றிய சில முக்கிய குறிப்புக்கள்.  குழந்தைகளை நாம் புரிந்து கொள்ளவும், குழந்தைகள் நம்மை புரிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.


கோவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியில்; உங்கள் குழந்தையின் நடத்தைகளுக்கு பதிலளித்தல்
கோவிட்-19 போன்ற எதிர்பாராத மற்றும் தீவிரமான சூழ்நிலைகள் வயது வேறுபாடின்றி அனைவரிலும் கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக குழந்தைகள் அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர். துன்பகரமான சூழ்நிலைகளுக்கான எதிர்வினைகள் நபருக்கு நபர் வேறுபடலாம். எதிர்வினைக்கு சரியான அல்லது தவறான முறை என்று இல்லை. இருப்பினும், குழந்தைகள் வயதுவந்தோரின் நடத்தைகளை பிரதிபலிக்கக்கூடும். ஆகவே அவர்களின் பெற்றோர் ஃ பராமரிப்பாளர்களாக, சிறந்த நடைமுறை உத்திகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். அவர்களின் உளவியல் தேவைகளை ஆதரிப்பது இந்த சவாலான நேரத்தில் அவர்களின் பாதுகாப்பையும் ஆறுதலையும் உறுதி செய்யும்.

No comments

Powered by Blogger.