Header Ads



இலங்கை வரலாற்றில் கோட்டாபய - மஹிந்த பெயர்கள் பதியப்பட வேண்டும்

கொவிட் - 19 வைரஸ் பரவலை இலங்கை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது என்று எதிர்காலத்தில் எழுதும் போது முதலாவது ஜனாதிபதியின் பெயரை குறிப்பிடுவதுடன், இரண்டாவதாக பிரதமரின் பெயர் பதவிடப்பட வேண்டும் என்றும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு தேவையான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுத்தாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அங்கொடை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்களின் தங்குமிட வசதியை நிவர்த்தி செயற்வதற்காக அமைக்கப்பட்ட கட்டிடத்திறப்பு விழா இன்று -08- வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விலே கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை இந்த நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற மதிப்பிடமுடியாத சொத்தாகும். வைத்தியசாலையின் பணிப்பாளர் அனைத்து வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ குழுவினரையும் இணைந்துக் கொண்டு மக்களுக்கா பெரும் சேவையாற்றி வருகின்றார்.

இவர்கள் எதிர்காலத்தில் வீரர்களுக்குறிய சின்னங்களுக்கு உரிமைக் கோரவேண்டியவர்கள். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஐ.டீ.எச் வைத்தியசாலையின் வைத்திய குழுவினருக்கு உற்சாகமூட்டுவதற்காகஅ டிக்கடி வைத்தியசாலைக்கு சென்று வந்தேன்.

இந்த வைத்தியக் குழுவினர் தமது வீடுகளுக்கும் செல்லாமல், பல தீயாகங்களை செய்தும், மன அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது கடமையை நிறைவேற்றி வந்தார்கள். இவர்களுக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.

கைகளை கழுவி, நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணி வந்தாலே வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க இலங்கையால் முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்கள் இந்த வைத்திய குழுவினரே .இவர்களாளே நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வைரஸ் பவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பெரும் சேவையாற்றியுள்ளனர்.

வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய அவர்கள் தீர்மானம் எடுத்ததன் காரணமாகவே வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரையும் தமது பிள்ளைகள் என்று விழிக்கும் சிறந்த தலைவர் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், எமக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும்.

தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியும் என்று எதிர்பார்ப்பதுடன் ஜனாதிபதியால் அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் இலங்கை எவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து தப்பிக் கொண்டது என்று எழுதப்பட்டால், முதலில் ஜனாதிபதியின் பெயர் எழுதப்படுவதுடன், இரண்டாவதாக பிரமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பதிவிடப்பட வேண்டும்.

அவர் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவத்தை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுத்துள்ளார். இதேவேளை இந்த தாதியர் வதிவிடத்தின் கட்டுமான பணிகளுக்காக நிதி உதவிணைப் பெற்றுக் கொடுத்த 'ஈஸ்ட் கோஸ்ட்' நிறுவனத்தின் தலைவர் சுகுமார் நாகேந்திரனுக்கு நன்றித் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.