Header Ads



மக்களே எம்மைச்சுற்றி அச்சுறுத்தல் உள்ளது, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

(ஆர்.யசி)

அடுத்த வாரம் தொடக்கம் ஊரடங்கு தளர்க்கப்படுவதால் நிலைமைகள் வழமைக்கு திரும்பிவிட்டதாக மக்கள் நினைத்துவிட வேண்டாம்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகிறோமே தவிர நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை ஒருபோதும் வழங்க முடியாது என்கிறார் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர. எம்மை சுற்றி வைரஸ் அச்சுறுத்தல் இருந்துகொண்டு உள்ளதென்பதே மக்கள் நினைவில் வைத்துக்கொண்டு நடமாடுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் குறித்த நிலவரம், மற்றும் அடுத்ததாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கூறுகையில் அவர் தெரிவித்ததானது,

கொவிட் -19 வைரஸ் தொற்றுரோய் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் இனி ஒருபோதும் வைரஸ் பரவாது என்ற சான்றிதழை வழங்க முடியாது. மீண்டும் ஏதாவது ஒரு பிரதேசத்தில் எவருக்கேனும் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் ஏற்படலாம்.

ஆகவே அது குறித்த ஆய்வுகளை செய்தவண்ணமே நாம் இருப்போம். ஒருவேளை அவ்வாறு எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பின் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புகளில் இருந்தவர்களையும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். வைரஸ் தொற்றுப்பரவல் சமூக தாக்கத்தை ஏற்படுத்தவதை தடுக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் இலங்கையில் இப்போது நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் உலக அளவில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் முழுமையாக அழிக்கப்படும் வரையில் அல்லது அதற்கான மருந்து பாவனைக்கு வரும் வரையில் நாம் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்தாக வேண்டும். 

ஆகவே இத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது என்ற மகிச்சியுடன் அடுத்த வாரம் தொடக்கம் எம்மால் வழமையான வாழ்கையை வாழ முடியும் என நினைத்துவிட வேண்டாம். 11 ஆம் திகதி ஊரடங்கை தளர்க்கப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், மக்கள் நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடும் வேளைகளில் நாம் இன்னமும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும் என்றார். 

1 comment:

  1. அருமையான ஆலோசனை, பொதுமக்கள் ஒவ்வொருவரும் இந்த ஆலோசனைகளை மிகக் கவனமாக வாசித்து ஒவ்வொரு விடயமாக மிகவும் ஜாக்கிரதையுடன் பின்பற்ற வேண்டும்.மருத்துவ ஆலோசனைகளுடன் சமூக இடைவௌியைப் பேணுவதும் அவசியத் தேவைக்காக வௌியில் செல்லும்போது முகக் கவசம் அணிவதும் கட்டாயமான விடயங்களாகும்.

    ReplyDelete

Powered by Blogger.