Header Ads



அததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..!

முஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விடயம். 

பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லாமலும் வீதியில் திரிந்துக் கொண்டிருக்காமலும் நோன்பு பெருநாள் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள். 

இவ்வாறான நிலையில் அட்டுலுகம பிரதேசத்தில் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறு பெருநாளை கொண்டாடுகிறார்கள் என்பதை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் தெரண ஊடகவியலாளரை பிரதேசத்துக்கு வரவழைத்துள்ளார். 

அங்கு சென்ற அவர் தலைவரின் நேர்காணலை முடித்துவிட்டு செல்லும் வழியில் அநாவசியமாக ஊரில் உள்ள இன்னும் பல பள்ளிவாசல்களையும் படம் பிடித்துள்ளார். தான் ஓர் ஊடகவியலாளர் என்பதை அடையாளப்படுத்தும் எந்தவொரு அடையாள அட்டையும் ஆவணமும் காட்சிபடுத்தாத நிலையில் பள்ளிவாசல்களை படம் பிடித்துள்ளார். 

இதனை அவதானித்த ஊர்மக்கள் அவரிடம் எதற்காக பள்ளிவாசல்களை படம் பிடிக்கிறீர்கள் என்று வினவியுள்ளனர். தான் ஓர் ஊடகவியலாளர் என்றும் தனக்கு இங்குள்ள நிலைமைகளை படம் பிடிப்பதாகவும் கூறியுள்ளார். ஊர் மக்களின் செயற்பாடுகளை படம் பிடிப்பதற்கு பதிலாக எதற்காக பள்ளிவாசல்களை படம் பிடிக்கிறீர்கள் என்று ஊர் மக்கள் கேட்டனர். இதற்கிடையில் ஊர் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் வாய்த்தர்க்கமாக மாறியது. 

இதனை அடுத்து குறித்த ஊடகவியலாளர் தான் செய்தி சேகரிக்க சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவித்து பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். உடனடியாக விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர். 

இன்றைய தினம் 25.05.2020 பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்தார். 

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி றமீஸ் பசீர் "இணக்கப்பாட்டுடன் நிறைவு செய்யும் வழக்கொன்றுக்கு அடையாள அணிவகுப்பு தேவை இல்லையென்றும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறும் கோரினார். 

மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பொலிசார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து  14 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர். 

சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெற்ற  வாதங்களின் பின்னர் வழக்கினை விசாரணை செய்த பதில் நீதவான் சந்தேக நபர்களை நாளை வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார். 

7 comments:

  1. ஊர் தலைவர் ஏன் இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்தான்? ஒரு இனவாத ஊடகத்தை அழைத்து
    தங்களை நிரூபிக்க வேண்டிய தேவை எதற்கு?

    ReplyDelete
  2. VENDUMENREI THITTAMITTU THUVESHATHAI PARAPPUM, NOKATHUDAN
    VARUM TV KO, ALLATHU PATHIRIKAIKO
    PETTI KODUPPATHU MUTTALTHANAM.
    EN IVARKALUKKU MUKKIYATHUVAM ALIKKIREERKAL.
    TV KU PETTI KODUKKA AASHAIPATTAVARKAL
    IVARKALTHAAN, KUTRAVAALIKAL.

    ReplyDelete
  3. Why the hell did that Mosque administrator invite Derana guy in the first place? What was he trying to prove?

    ReplyDelete
  4. பள்ளி நிர்வாகத் தலைவருக்குத் தெவெயற்ற வேலை.

    ReplyDelete
  5. கவனிக்காமல் விட்டிருக்கவேண்டும். குளிக்கப்ோய்சேரு பூசிய கதை

    ReplyDelete
  6. அட்டுளுகம பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் இனவாத ஊடகமான தெரண தொலைக்காட்சி ஊடகவியலாளரை வரவழைத்தது முட்டாள் தனமான செயலாகும்.பேய்க்கு வைத்தியம் பார்க்க அந்த பேயையே அழைத்து வந்ததற்கு ஒப்பான இந்த செயலே அநியாயமான கைதுகளும் இன்னும் பல விளைவுகளும் ஏற்பட காரணமாக அமந்துள்ளது.

    ReplyDelete
  7. What is the use of proving this to a media? What did this head expect from a media? First of all there are some muslims who need to be checked by a sycolgist for any mentel disorders. We all know derana and hiru are always spying muslims to find somthing and turn it to a community issue. Then why our some fools still approaching these medias.???????????????????????????????????????

    ReplyDelete

Powered by Blogger.