Header Ads



அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை, தொடர்ச்சியாக அமல்படுத்த வேண்டும்

- பாறுக் ஷிஹான் -

வைத்தியர்கள் தாதியர்கள் படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள்  என   கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தெரிவித்தார்.

கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை(1) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில்

கடந்த வருடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பாரிய ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்தோம் இதுகுறித்து இன்னும் சரியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் கொரோனா அனர்த்த காலத்தில்  அக்கறையுடன் செயற்படும் அரசாங்கம் வடக்கு பிரதேச செயலக விடயத்திலும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த வாரத்தில் ராணுவ வீரர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு வந்த கட்டத்தில் சிலர் கேவலமாக நன்றி அறியாதவர்களாக பேசிவருவது மனசுக்கு வேதனையாக இருக்கின்றது அதேபோன்று இராணுவவீரர்கள் அல்ல மட்டுமல்லாது வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார ஊழியர்கள் தமது உயிரைப் பார்க்காமல் எமது நாட்டில் வாழும் சமுதாயம் இளம் சந்ததியினர் பாதுகாக்கப்பட வேண்டுமென போராடு போராடும் இந்த துறையினர் குறித்து இழிவான வார்த்தைகளை பேச வேண்டாம்.

கடந்த மாதங்களில் வைத்தியர்கள் தாதியர்கள் படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிப்பது நன்றியுள்ள ஒருத்தர் கூறும் கருத்து அல்ல.நோய்த்தொற்று வேண்டும் என்று ஒருத்தர் பரப்பியது அல்ல இது உலகளாவிய ரீதியில் ஆட்கொள்ளப்பட்டு வருகின்ற  உலகளாவிய ரீதியில் வைரஸ் தாக்கத்தையும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முப்படைகள் வைத்தியர்கள் அயராது பாடு படுகின்றனர்.

அவர்கள் இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஒத்துழைப்பு தருவதன் மூலம் மாத்திரம் தான் இந்த ஊரடங்குச் சட்டத்தை நீக்கி சுமுகமான சூழ்நிலைக்கு நாம் மீண்டு வரமுடியும்.அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட வேண்டும் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அத்தியாவசிய சேவையை அரசாங்கம் வீடு வீடாகச் சென்று நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

1 comment:

  1. நீங்கள் கூறுவது மிகச் சரி,ஆனால் இலங்கையில் உள்ள இரண்டு இனவாத ஊடகங்கலும் அதன் நிகழ்ச்சி நடத்துபவர்கலும் இலங்கையில் கொரோனாவை பரப்பியது Muslim கள் எனும் வகையில் இனவாத பிரச்சாரம் செய்வதை நீங்கள் எப்போதாவது எதிர்த்தது உண்டா?

    ReplyDelete

Powered by Blogger.