Header Ads



எதிர்கட்சிகள் அரசியல், ஆதாயம் பெற முயற்சி - பீரிஸ்

அரசாங்கம் தேர்தலை நடத்துவதை நோக்கமாக கொண்டு கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டே அரசாங்கம் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துகின்றது தேர்தலை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை செவிமடுக்கும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கை வாழ்வாதாரமின்றி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களிற்கு உதவுவதையும்,பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மீள ஆரம்பிப்பது முக்கியமானது ஆனால் மிகுந்த அவதானத்துடன் இதனை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தேர்தல்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை,தேர்தல் ஆணையம் இது குறித்த முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் எனினும் எதிர்கட்சிகள் இந்த நிலைமை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வது துரதிஸ்டவசமானது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.