Header Ads



தைக்கா பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ, தொழுகைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்

- Dr Abdul Razak  -

இலங்கையில் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரையறுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 100. பேரூந்து பயணங்களில் அதன் இருக்கைகளுக்கு சமமான அளவு பிரயாணிகள் பயணிக்கலாம். இப்படி நிலைமை இருக்க, வணக்க வழிபாட்டுத்தலங்களுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை.

ஜும்ஆ பள்ளியவாயல்களென்றும் ஏனைய பள்ளிவாயல்கள் என்றும் பிரித்து வைத்து எமது வணக்கவரிபாடுகளை மேற்கொள்ளும் நாம் இந்தக் காலகட்டத்தில் ஒரு பள்ளியில் 
அதிகமானோர் கூடுவர் என்ற காரணத்தைக்காட்டி வணக்கவழிபாடுகளுக்கான அனுமதி மறுக்கப்பட தொடர்ந்தும்  வாய்ப்பிருக்கிறது.

40 நபர் கூடினால் ஜும்ஆவை நிறைவேற்றலாம் என்றிருந்தால், நம்மிடமுள்ள அனைத்துப் பள்ளிவாயல்களையும் ஜும்ஆ செய்யக்கூடிய பள்ளிகளாக மாற்றுவோமேயானால் சனநெரிசலைக் குறைத்து நமது வணக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். 

அனைத்துப்பள்ளிகளும் ஒரே தலைப்பில் ஜுஆ பிரசங்கத்தை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லலாம்.
சட்டத்தையும் மதித்து நடக்கலாம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, கலாச்சாரத் திணைக்களம், வக்பு சபை, முஸ்லிம் புத்திஜீவிகள் இப்படயொரு யோசனையை பரிசீலனை செய்வார்களா...?

2 comments:

  1. Dr. Abdul Razak அவர்களின் யோசனைகள் காலத்திற்கேற்றதும் நடைமுறைச் சாத்தியமானதுமாகும்.  இறை வழிபாடும் காலத்திற்கேற்ற நல்வழிப்படுத்தல்களும்  மக்களுக்கு இலகுவாக்கப்படல் வேண்டும்.  அப்போதுதான் சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் பெருகுவர்.

    பன்முகத்தன்மை கொண்ட இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கு மத்தியில், அடிப்படையில் நாம் அனைவரும் சகோதரர்களே என்ற ஒற்றுமையை ஏற்படுத்தவும் இவை உதவும்.

    ReplyDelete

Powered by Blogger.