Header Ads



ஜனாஸா எரிப்பும், முஸ்லிம் தலைமைகளும் - அலி சப்ரி மீது, விரல் நீட்டுவது நியாயமா...?

- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

 ஜனாஸா எரிப்பு என்ற விடயத்தில் எல்லா முஸ்லீம்களும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். இதிலே கட்சி வேறுபாடு இருக்க முடியாது. முஸ்லிம்கள் எல்லா  விடயங்களிலும் மார்க்கத்தின் கட்டளைகளை அப்படியே நடைமுறைப்படுத்துவதில் பின் நிற்பதில்லை. எமக்கு நினைத்தவாறு மார்க்கக் கட்டளைகளை மாற்றம் செய்வதில் எந்தவிதமான உரிமையும் இல்லை என்பதில் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் சிறுபான்மையாக உள்ள இந்த நாட்டில் சில நேரங்களில் எமது மார்க்க உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் நடத்த வேண்டியுள்ளது .சில நேரங்களில் போராட்டங்களில் தோல்வியை தழுவ நேரிடலாம்.

ஜனாசா எரிப்பு விடயத்தில் இற்றைவரை நாம் தோல்வியே கண்டிருக்கின்றோம் இறுதியாக நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சில முஸ்லிம் தலைமைகளும் அமைப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டாலும் இறுதியில் எல்லோரும் ஆளும் தரப்பின் பக்கம் பொறுப்பைச் சாட்டி விட்டு ஏனையோர் தப்பிக்கும் வழி வகைகளைத் தேடுகின்றனர்.ஆனால் சுமந்திரன் அவர்கள் நீதிமன்றம் செல்ல உதவத் தயாரானபோது தூங்கிக் கிடந்த தலைமைகள் எல்லாம் துள்ளிக்குதித்து முதலாவது இடத்தைப் பிடிக்கத் துடித்தன. அதுவரை மௌனமாக இருந்த மர்மம் எரிப்பு விடயத்தை வைத்தே தேர்தல் மேடைகளில் வாக்குக் கொள்ளையில் ஈடுபடுவதற்கா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

மோதர பெண் ஜனாசா covid 19 காரணமாக நிகழ்ந்தது என்று பிழையான தீர்ப்பு வழங்கப்பட்டது என்ற விடயத்தில் நான் எனது கருத்தை முகப்புத்தகத்தில் பதிந்த போது சிலர் ஏளனமாக எனது கருத்தை சித்தரிக்க முயன்றனர்.காரணம் நான் ஆளும் கட்சியின் ஆதரவாளன் ஒருவனாக இருப்பது ஆகும். எனது கருத்தை அரசுக்கு எதிரான ஒருவர் பதிந்திருந்தால் பாராட்டுக்கள் குவிந்து இருக்கும்.நல்ல உதாரணம் தனித்துவத் தலைவரின் அமைச்சின் ஊடக செயலாளராக இருந்த சகோதரர் முதலைக் கண்ணீர் என்று அதனைக் கூறியிருந்தார். ஆளும் கட்சியில் உள்ளவர்கள் இரக்ககுணமற்ற அரக்கர்கள் என  சமூகத்துக்கு காட்டி தமது வாக்கு வங்கிகளை க் காப்பாற்றுவது தான் குறுகிய நோக்கம்.

 இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அன்று திகன கலவரத்தின் போது  உயிருடன் இளைஞன் ஒருவன் எரியூட்டப்பட்ட போது, மினுவாங்கொடையில் இனவாதிகளால் அடித்து ஒரு குடும்பஸ்தர்  கொலை செய்யப்பட்டபோது, அதேபோல் நிக்கவரட்டியவில்   ஒருவர் இனவாதிகளால் கொலை செய்யப்பட்டபோது மற்றும் கண்டியிலே பிரபலமான மௌலவி அவர்கள் இனவாதிகளின் தாக்குதலால் படுகாயம் அடைந்து பின்னர் வபாத்தான போது அவர்களும்  முதலைக் கண்ணீர்தான் வடித்திருப்பார்கள் என்று. அன்று அவர்கள் ஆளும் கட்சியின் பிரபல ஆதரவாளர்கள்.ஆகவே அந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் வெறுமனே கவலையை தெரிவித்தது மட்டுமல்லாமல் காத்திரமான எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்களாலும் எடுக்க முடியவில்லை.

எரிப்பு விடயத்தில் எல்லோரும் விரல் நீட்டுவது பொதுவாக  அலிசப்ரி அவர்களுக்கு எதிராக ஆகும். இந்த விடயத்தில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்ததாகவும், ஜனாதிபதி அவர்கள் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு விடயத்தையும் கையாளுகின்றமையினால்  இந்த விடயத்தில் சுகாதாரத்துறையினர்  எரியூட்டல் மட்டுமே இலங்கைக்கு பொருத்தமானது என்று விடாப்பிடியாக இருந்ததனால் ஜனாதிபதி அவர்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளார் என்பதை அலிசப்ரி அவர்கள் அண்மையில் UTV பேட்டியின்போது தெளிவுபடுத்தினார். பல துறைசார் வல்லுனர்களைக் கொண்டு சுகாதாரப் பணிப்பாளர் அவர்களுக்கு விளக்கத்தைக் கொடுத்து இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்வதற்கு அனுமதியை பெற முயற்சித்தாலும் அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் நடக்காது விட்டு தனது கவலையையும் தெரிவித்தார்.

கடந்த அரசின் காலத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்தும் வரலாற்றில் என்றும் இல்லாத அநியாயங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதிகளவான பாதிப்பு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டது கடந்த அரசில் ஆகும்.அத்தனை அநியாயங்களையும் அங்கீகரிப்பது போல் அந்தத் தலைமைகள் மௌனம் காத்ததன் மர்மம் பட்டங்களும் பதவிகளும் ஆகும்.

அரசியல் ஞானம் பெற்ற எந்த ஒரு தலைவருக்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போவது கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே என்பதை தெரியாமல்  இருக்க முடியாது. ஏனெனில் அதற்கு முன்னைய வருடம் நடைபெற்று உள்ளூராட்சி தேர்தல் பெறுபேறுகள் அதற்கு சான்று பகிர்ந்தன. ஆனால் எதுவுமே புரியாதது போல் முஸ்லிம் மக்களின் 95% வாக்குகளையும் தோல்வியுற்ற சஜித் அவர்களுக்கு வாரி வழங்கும்படியாக பிரச்சாரம் செய்து விட்டு 5% முஸ்லிம் வாக்குகளை பெற்ற கட்சியின் முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதன் நியாயம்தான் என்ன? ஆளும் கட்சியில் அன்று அவர்களால் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியவில்லை.இன்று அரசின் ஆதரவாளர்கள் மட்டும் சமூக பிரச்சினை களுக்கு பொறுப்பாளிகளாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமானது.

2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டது அவரின் ஆட்சியில் நடைபெற்ற அநியாயங்கள் தான் காரணம் என அலிசப்ரி அவர்களின் பேட்டியை   வீடியோப் பித்தன் ஒருவர் விமர்சித்து இருந்தார்.ஆனால்  2020 இல் நல்லாட்சியின் வரலாறு படைத்த கொடுமைகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஒன்று திரளாத காரணத்தை சொல்லாமல்  மறைத்து விட்டார்.

UTV பேட்டியில் அலிசப்ரி அவர்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் தமது கருத்துக்களை வழங்கினார்.தான் குறுகிய நோக்குடன் அரசியல் பயணத்தை தொடரவில்லை என்பதையும் சமூக நலன் ஒன்று மட்டுமே தனது இலக்கு என்பதை ஆணித்தரமாக கூறினார்.அரசின் தலைமைகள் மீது தமக்கு இருக்கும் நம்பிக்கையை உறுதிபட எடுத்துரைத்தார்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 4 1/2 வருடங்கள் இந்நாட்டை ஆளப் போவது கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கீழான அரசே.முஸ்லிம் சமூகத்தின் குரலாக , பிரதிநிதியாக குரல் கொடுக்க அதில் எமது பிரதிநிதிகள் அவசியம்.அதில் எம் சமூகத்துக்கு ஏதேனும் நன்மைகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும்.எந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் இல்லாத ஒரு அரசை உருவாக்கி வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாக நாம் ஆளாகக் கூடாது. அண்மையில் அலி சப்ரி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் கூறிய விடயம் இந்திய முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக தோல்வியுற்ற  காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரண்டு இன்று அனாதரவான ஒரு சமூகமாக பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிக் கொண்டு உள்ளனர்.அரசு அவர்களைக் கண்டதும் காணாதது போல் உள்ளது.எனவே எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாமல் பிரித்துப் போடும் வழிவகைகளைப் பற்றி மீண்டும் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது..

9 comments:

  1. குஜராத்தில் 3000 முஸ்லிம்களை எரித்துக்கொன்றவனை ஆதரிக்க இந்திய முஸ்லிம்கள் என்ன இலங்கை முஸ்லிம்களை போன்று கொள்கையில்லாத சூடு சுரணையற்றவர்களா? அவர்கள் எம்மைப்போன்ற கேடுகெட்ட சரணாகதி அரசியல் செய்யாததால் தான் இன்றுவரை அங்கு போராடியாவது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் இந்து பயங்கரவாதம் அவர்களை என்றோ விழுங்கியிருக்கும். தான் பக்க அரசியல் நியாயத்திற்கு கட்டுரையாளர் கொடுக்கும் இந்த உதாரணம் படு கேவலம். இந்திய முஸ்லிம்கள் கண்டால் காரி உமிழ்வார்கள்

    ReplyDelete
  2. What Muslims need is not privileges but rights that cannot be won by former money earning leaders or cronies in the present regime.

    ReplyDelete
  3. இப்போது முஸ்லிம் பெருங்குடி மக்களுக்கு யார் "நல்ல" தலைவன் யார் "கூடாத" தலைவன் என்று துப்பறிய வேண்டியிருக்கின்றது.

    ReplyDelete
  4. Hahahahah...sirikkattaaan mattum mudium intha katturai...

    ReplyDelete
  5. சூடு சுரணை இல்லாத ஆக்கம்

    ReplyDelete
  6. This article is an election compaing...

    It ask technically ask Musims to vote the particular party.

    It is true in the last government, Muslims faced huge trouble...
    BUT
    WHO WERE BEHIND THESE VIOLENCE AGAINST MUSLIMS during the last government ? was it the past government or members of present ?

    It is true last government was weak and was not able to protect Muslims from the racist.. BUT those racist were supported by which politicians at that time.

    It is sure Muslim should be wise in politics.. BUT can not be like a MUNAFIQ to support a group who openly burned Masjids, Quran and Muslims from Aluthgama, Digana, Ampara upto Minuwangoda..

    OK.. the article claims that, we should be in both party... OK Let me ask you this.... by sticking to these parties, can we get our rights ? If you say YES.. Then why such members could not stop the BURNING OF MUSLIMS body being a close ally to them?

    FOR MUSLIMS,, IT is true... WE SHOULD BE WISE IN POLITICS, BUT WE CAN NOT ACT AS MUNAFIQ in supporting any one who opposes ISLAM and MUSLIMS.

    WE SHOULD FIND ways and make plans raise and strengthen our society by PROMOTING..

    1. PRACTICING TRUE ISLAM based on knowledge from autherntic sources
    2. PROVIDING QUALITY WORLDLY EDUCATION in all the fields
    3. CONDUCTING RESEARCH IN EACH FIELDS of LIFE to find shortcomings and then correct them.
    4. PRACTISING GOOD Qualities and behaviours toward others So on..

    This way let us strengthen us as a strong Citizens, so that racist will not be able to harm us any more.

    Out of fear that, they will harm if not vote, "So vote them" This will not fit for STRONG MUSLIM but for WEAK or Munafiqs only.

    NOTE: Allah will not help us unless we strive for good and wise changes with us.

    ReplyDelete
  7. உங்களுடைய அலிசப்ரிக்கு எதிராக தேரர்கள் கிளம்பிவிட்டார்கள் அது உமக்கு தெரியுமா எப்படியோ முஸ்லிம் ஒருவரையும் அவர்களுடைய கட்சியின் மூலமாக அவர்கள் எடுக்க கூடாது என்பது தெட்டத்தெளிவு

    ReplyDelete
  8. Dear Brother Attorney-at-Law Fazleen Wahid,
    The above article/request to the Muslim Vote bank/community is reasonable. "The Muslim Voice" did not wish to comment on your article, but reading through the comments, it is the duty of "The Muslim Voice" thought it best to make things understandable to all, Insha Allah.
    IF GOD ALLMIGHTY ALLAH WISHES - what you believe in, quote:"UTV பேட்டியில் அலிசப்ரி அவர்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் தமது கருத்துக்களை வழங்கினார்.தான் குறுகிய நோக்குடன் அரசியல் பயணத்தை தொடரவில்லை என்பதையும் சமூக நலன் ஒன்று மட்டுமே தனது இலக்கு என்பதை ஆணித்தரமாக கூறினார்.அரசின் தலைமைகள் மீது தமக்கு இருக்கும் நம்பிக்கையை உறுதிபட எடுத்துரைத்தார்", unquote. WILL HAPPEN - Alhamdulillah, Insha Allah.
    That is the "yataartham". No one wanted Brother Attorney-at-Law Ali Sabry to come to parliament through the "National List" of the SLPP before the next general elections, Insha Allah.
    Because another election was expected soon, the general election, sometime in March/April 2020, but has been postphoned without a defenite date due to "COVID19". "The Muslim Voice" is of opinion The Muslim Vote Bank will be acting on their own again and it is time that the Muslim Vote Bank should have a UNITED VISION to work with. A vision to support the SLPP, accepting the present reality and looking into the future, Insha Allah. At the 2015 elections, President Gotabaya Rajapaksa (POTTUWA GROUP) polled little over 300,000 Muslim votes, Alhamdulillah.
    It is the opinion of the writer that a Muslim personality placed in the position of Attorney-at-Law Ali Sabry's position by the blessings of God AllMighty Allah, in the centre of the HE.President Gotabaya Rajapaksa/Hon. PM. Mahinda Rajapaksa new government should come forward to launch a political campaign in the Eastern province and Muslim populated areas to bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". Brother Ali Sabry may not have " real-life political background or experience or mingled in politics", but he is capable about working through it, Insha Allah. Brother Ali Sabry has spoken about a new POLITICAL CULTURE for the Muslims in the media too. It is now his duty to help the Muslim Vote Bank to create that culture. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in 2020 with our Muslim representatives, as partners, Insha Allah.
    That is why "The Muslim Voice" feels there is a need to immediately call a "meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership with you as the "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join you in this mission. THIS WILL STRENGTHEN BROTHER ALI SABI's position in the National list of the SLPP very much and even help him to seek for a "CANINET" position, Insha Allah.
    "The Muslim Voice" also wishes to call your kind attention to this link article published today: http://www.ddinews.gov.in/international/sri-lanka-minority-tamil-political-parties-urged-stand-united-issues-faced-tamils
    The Muslim Vote Bank should also have a UNITED VISION to work with, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  9. The interview was very meaningful.mulslims have to be in the main stream parties.not in one party.he is doing whatever he can do.leran to appreciate.you can submit your opinions but don't insult anyone. We can't open anyone's heart and come to conclusions.if you criticise and insult people become demotivated.he has his right to support ant party he wishes.you can't compel anyone to follow what u follow.

    ReplyDelete

Powered by Blogger.