Header Ads



படைவீரர் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு, பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது - இராணுவத் தளபதி

தேசிய படைவீரர் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் -20- தொலைக்காட்சி ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா போன்றவர்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதன்போது, சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்திருந்தார் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தனிப்பட்ட ரீதியில் சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தனது நிகழ்ச்சி நிரலை பார்த்துவிட்டு எனக்கு அது பற்றி அறிவிப்பதாக சரத் பொன்சேகா அப்போது கூறியிருந்தார் அதன்படி, நேற்று முன்தினம் இரவு எனக்கு அழைப்பு ஏற்படுத்தி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதனால் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது என்றார்” என சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.