Header Ads



ஜூன் மாதத்திற்கு 5000 ரூபா, வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை - மகிந்த தேசப்பிரிய

நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத்தொகையின் ஜுன் மாதக்கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தான் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய ஜுன் மாதக்கொடுப்பனவை நிறுத்த அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ள கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, குறித்த நிவாரணம் வழங்கும் செயற்பாடானது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல்கட்சிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்புமாயின் ஜூன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண்டுமா என்பது குறித்து “மீள் பரிசீலனை” செய்யுமாறும் கடிதமொன்றினூடாக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிவாரணத் தொகையை வழங்கும் போது பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான அரசியல்வாதிகளின் தலையீட்டைத் தவிர்க்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.