Header Ads



மத்திய கிழக்கு நாடுகளில் 350 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று


மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதிகமான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரகத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 200க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கட்டாரில் 35 பேரும், சவுதி அரேபியாவில் 12 பேரும், ஏனையவர்கள் ஏனைய நாடுகளிலும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, டுபாயில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை விடவும் அதிகமான இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனவும் பலர் தகவல் வழங்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.