Header Ads



இன்னும் 2 ஆண்டுகளுக்கு, இப்படியே வாழ வேண்டியிருக்கும்


சமூக விலகல் கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்பதால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இப்படியேதான் வாழ வேண்டியிருக்கும் என்கிறார் சுவிஸ் மருத்துவர் ஒருவர்.

இன்னமும் ஒரு வைரஸைக் குறித்த முழுமையான விவரங்கள் தெரியாத நிலையில், அவற்றைக்குறித்து வெளியாகும் எதிர்பாராத தகவல்கள், ஒரு பாதுகாப்பான திறன் வாய்ந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதை மேலும் தாமதமாக்கும் என்று கூறியுள்ளார் Matthias Egger.

Matthias Egger, கொரோனா குறித்த ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக சுவிஸ் அரசு அமைத்த அறிவியலாளர்கள் குழுவின் தலைவராவார்.

பெருமளவில் தடுப்பு மருந்துகள் தயாரிப்புக்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதுவரை, சமூக விலகல் முதலான கட்டுப்பாடுகள் தொடரவேண்டும் என்கிறார் அவர். அப்படிப்பார்த்தால், இன்னும் இரண்டு வருடங்களுக்கு நாம் இப்படியேதான் வாழவேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

மீண்டும் கொரோனா கொள்ளை நோய் பரவாமல் தடுக்கவேண்டுமானால், சமூக விலகல், கைகளை கழுவுதல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் நீண்ட காலத்திற்கு தொடரவேண்டியது அவசியம் என்கிறார்கள் பிற அறிவியலாளர்களும்.

No comments

Powered by Blogger.