Header Ads



ஸ்பெயினில் கொரோனாவை வென்ற 113 வயது பாட்டி


ஸ்பெயின் நாட்டில் 113 வயதை கடந்த பாட்டி தனது மன வலிமையால் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மீண்டு முற்றிலும் குணமடைந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் அதிசயம் - மனவலிமையால் கொரோனாவை வென்ற 113 வயது பாட்டி
கொரோனாவை வென்ற 113 வயது பாட்டி மரியா பிரன்யாஸ்
மாட்ரிட்:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது

உலகில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அடுத்து இரண்டாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஸ்பெயினில் 2 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு 27 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் 113 வயதை கடந்த பாட்டி தனது மன வலிமையால் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மீண்டு முற்றிலும் குணமடைந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் கிழக்கே அமைந்த ஓர்லாண்டோ பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் மரியா பிரன்யாஸ் என்ற 113 வயது மூதாட்டி வசித்து வருகிறார். 

கடந்த மாதம் இந்த மூதாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தனி அறையில் பல வார காலம் தனிமைப்படுத்தப்பட்டார்.

மரியா பிரன்யாஸ் தனது மன வலிமையால் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து முழுமையாக மீண்டு குணமடைந்து விட்டார். இதனால் ஸ்பெயினில் கொரோனாவிலிருந்து மீண்ட அதிக வயதுள்ள பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்

113 வயது பாட்டி கொரோனாவில் இருந்து மீண்டிருப்பது ஸ்பெயினில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

No comments

Powered by Blogger.