Header Ads



ஈஸ்டர் தாக்குதலும், அதற்குபின் ஏற்பட்ட சமூகங்களுக்கு இடையிலான பதற்றமும் அதிர்ச்சியை தந்தன - UN

இலங்கை உட்பட்ட சர்வதேச நாடுகளில் எவரும் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்குவதற்கான பொறுப்பில் இருந்து பின்வாங்கிவிடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்ற விடயங்களில் ஓத்துழைப்பு, பங்காளித்துவம், முயற்சிகள், அவர்களின் உரிமைகளுக்கு மரியாதையை உறுதிப்படுத்தல் என்ற விடயங்களில் எவரும் பின்வாங்கிவிடக்கூடாது என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒருவருட நிறைவை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமை அதற்கு பின்னர் ஏற்பட்ட சமூகங்களுக்கு இடையிலான பதற்ற சூழ்நிலை என்பன அதிர்ச்சியை தந்தன.

பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் போராடவேண்டும். பயங்கரவாதம் எந்த ஒரு மதத்துடன், இனம் மற்றும் குழுமத்துடன் இணைந்திருக்க முடியாது.

வைரஸிக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை அது சமூகங்களுக்கு இடையில் பிரிவுகளை அதிகரிக்கும். அத்துடன் பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும்.

இந்தநிலையில் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கலந்துரையாடல் மற்றும் சட்டம் ஒழுங்கை கடைபிடித்தல் என்பன அவசியமானவை என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.