Header Ads



ITN முஸ்லிம் ஊழியர்களுக்கு அநீதியா...? அப்படி நான் உத்தரவிடவில்லை, தேடிப்பார்க்கிறேன் - பந்துல

முஸ்லிம் ஊழியர்கள் மூலமாக கொரோனா தொற்றிவிடும் என்பதற்காக, சுயாதீன தொலைக்காட்சியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து, தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை எனவும் அதை தேடிப் பார்ப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியை கட்டியழுப்புவதில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலினால் சுயாதீனக் தொலைக்காட்சி முஸ்லிம் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு அதன் எப்எம் அலைவரிசையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் மீடியா போரத்திடமும் முறையிடப்பட்டிருந்தது. அதன் தலைவர் என்.எம். அமீன் இதுகுறித்து அரசியல் பிரமுகர் நகீப் மௌலானாவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

நகீப் மௌலானா இதுபற்றி, அமைச்சர் பந்துல குணவர்த்தனாவிடம் முறையிட்டிருந்தார்.

இதையடுத்தே குறித்த விடயம் தமக்கு தெரியாதெனவும், அவ்வாறான உத்தரவை தாம் விடுக்கவில்லை எனவும் இதுபற்றி  தாம் தேடிப் பார்ப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனா மேலும் தெரிவித்துர்ள்ளார்.

1 comment:

  1. who are those foolish relating corona with Muslims? if so why others are in hospitals, quarantine centers....? who was first corona victim in the country and .....? like these ugliest psychos should be removed from public positions.....

    ReplyDelete

Powered by Blogger.