Header Ads



சிங்கள மக்களின் மனங்களை வெல்லாவிட்டால், முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு

சிங்கள, பௌத்த மக்களின் மனங்களை வெல்லாவிட்டால் முஸ்லிம்கள் மேலும் ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய காணப்படுகின்றன.

மனச்சாட்சியுள்ள சமூக ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் சிந்திக்க வேண்டிய தருணமிது. 3 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எமது முஸ்லிம் கட்சித் தலைவர்களின் கருத்து கணக்கிலெடுக்கப்படாததும் சமூகத்திற்கு  தொடரான பின்னடைவை தந்துள்ளது எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான மருதமுனை ஹாதி இஸ்மாயில்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது- ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் முஸ்லிம் சமூகத்தை ஏளனமான முறையில் விமர்சித்தவர்களும், ஒரே நாடு ஒரே தேசம் என வாய்வீச்சு வீசியவர்களும் அமைதியாகி விட்டார்கள்.இவை இவ்வாறிருக்க பெரும்பான்மை மக்களிடம் நல்ல பெயர் ஒன்றினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில முஸ்லிம் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் எழுதுவதும்,  மாறாக கருத்துக்கள் வெளியிடாமல் மௌனமாக  இருப்பதும்,  அதே போன்று முகநூல் பாவனையாளர்களின் கிண்டல் செயற்பாடுகளும் மாற்று சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம் சமூகம் மீது இனவாத பார்வையை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலில் இனவாதம் என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அமைச்சரவையிலிருந்து அவரை அகற்ற வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவும் அனுர பண்டாரநாயக்கவும் இனவாதக் கருத்தை விதைத்த போது சாதுரியமான முறையில் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தடுத்து நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்மவர்களில் சிலர் Covid19 தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை உதாசீனம் செய்வதும்,  அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டவிதிகளை மீறி செயற்படுவதும்,  நாட்டு சட்டங்களை மதிக்காமல் நடந்து கொள்வதும் எமது சமூகத்தின் மீதான பார்வையை வேறு திசைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அம்மக்களை வாக்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவது ஒரு வாடிக்கையான விடயமாக இருப்பதுடன் இது சமூகத்திற்கு ஒருபேரிடியுமாகும்.

8 comments:

  1. how many time muslim community hep to shinkless people ? if help bufflo shinklaes people never satisy ? allah say behave untill unbelivers cultural never be satisfy ?, most poor people if not food how to survie ? those who never see curfew ? thes buggers have demolished srilanka econoy ? how to people survie ? if u go to any where lot of inntrest shop , how to our country progress ? 1999, 2014, 2018 2019 what happened ?mavanella conflict, althgama roits, house fashion no limit , garments , digagana roits ester bomblast minwangoda factory lot small shop burnt who was incharge all roits ? thse rajapaksa regerment , in hambanthoda, matra kurnagal area lot shinkal people walking on the road , nobody not talking , shinkal people are worwest people than donkey , i advice muslim , isalm what say , you fellow

    ReplyDelete
  2. கடைசி வரையில் சிங்களவர்களை நக்கி பிழைத்து தான் வாழவேண்டுமா?

    ReplyDelete
  3. Please tell what remedy do we have regarding cremation of Muslim Janaza.
    It is absolute violation of the constitution.

    ReplyDelete
  4. சேர் !!! நீங்கள் சொல்வது சரியா தவறா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.
    இலங்கை எங்கள் சொந்த தாய் நாடு அதாவது எல்லா மக்களும் சமமாக சந்தோஷமாக வாழ்வதற்கு உரிமையுள்ள து. இதற்கு இடையில் உங்களுடைய அரசியல் சுயநலத்திற்காக மதவாதை நல்லது மாதிரி பேசி பிரிக்கவேண்டாம். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. Think before talk both side.

    ReplyDelete
  6. எங்கடே நானாமார்கள் எப்பவும் எங்களின் குறைகளை தான் சொல்லுவார்கள்,நாங்கள் அவர்களோடு ஒற்றுமை என்பதற்கு அவர்களை சென்று நக்கவா.

    ReplyDelete
  7. Do we begging for their mercy? while they are lead by communal...and their moderates are keeping deep quite? what is your suggestion? propose any successful mechanism?

    ReplyDelete
  8. Do we beg for their mercy? while they are lead by communal...and their moderates are keeping deep quite? what is your suggestion? propose any successful mechanism?

    ReplyDelete

Powered by Blogger.