April 17, 2020

இப்படிச் செய்வதால் முஸம்மிலுக்கு, அப்படி என்னதான் கிடைத்து விடப்போகிறது...?

"தெரண" தொலைக்காட்சியில்  (15.04.2020) நடந்த "அழுத் பார்லிமேன்துவ" நிகழ்ச்சியின் வீடியோவை பார்க்கக்கிடைத்தது.

விமல் வீரவன்சவின் கட்சியைச் (தேசிய சுதந்திர முன்னணி) சேர்ந்த - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் அதில் கலந்துகொண்டிருந்தார். அவர் வழங்கிய பதில்களை பார்த்து மனமுடைந்து போனேன்.

👉🏿கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதை முஸம்மில் நியாயப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய அந்தக் கருத்துக்களில் தர்க்க நியாயங்கள் இருக்கவில்லை. விஞ்ஞான அடிப்படையும் இருக்கவில்லை. எரித்ததை நியாயப்படுத்தியே ஆவது என்ற இலட்சியத்தோடு வந்து; அதனை செய்து முடிப்பதாகவே தென்பட்டது.

👉🏿போதாக்குறைக்கு, ஈஸ்டர் குண்டுவெடிப்பு காலத்தில்; பள்ளிவாயல்களில் நாய்களோடும் சாப்பாத்துக் கால்களோடும் புகுந்து தேடுதல் நடாத்தியதையும் நியாயப்படுத்தினார். அதனை முஸ்லிம் சமூகம் எதிர்த்ததையும் தவறு என்றும் நிறுவ முனைந்தார். இனவாதிகள் ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்ற "பொரியை" மீண்டும் மெல்ல வாய் நிறைய கொடுத்தார்.

ஜனாஸாக்களை எரிப்பதை நியாயப்படுத்தியதும் - பள்ளிவாயல்களில் நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடாத்தியதை நியாயப்படுத்தியுமான - முஸ்லிம் பெயர் தாங்கிய இவரின் கருத்துக்களை - இலட்சக்கணக்கான சிங்கள மக்கள் பார்த்திருப்பார்கள்

அவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தவர்கள்; முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் "முரண்பாடான ஒரு சமூகமாக" கருதிக்கொள்வதற்கு - இவர் காரணமாக அமைகிறாரே என்ற கவலை - அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மனசைக் கவ்விக்கொண்டது.

கனத்த மனதோடு இரவு தூக்கத்திற்கு சென்றேன். தூக்கம் தூரமாகி புரண்டு புரண்டு முதுகு வலியெடுத்தது. முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் - தக்க நியாயங்களை முன்வைப்பதற்காக - நேர காலம் பார்க்காமல் செயற்படும் / எழுதும் நம் போன்றோரின் - அனைத்து முயற்சிகளும் வீணாக்கப்படுகிறதே என்ற கவலை ஆட்கொண்டிருந்தது. கடைசியில் களைப்பினால்தான் கண் மூடிக்கொண்டது.

முஸம்மில் உதவி செய்யாவிட்டாலும் - இந்த சமூகத்திற்கு உபத்திரம் செய்யாதிருக்கலாம்.

✔️இதனை எப்படி அழைப்பது; துரோகமா? காட்டிக்கொடுப்பா?

✔️இப்படி செய்வதால்; அப்படி என்னதான் கிடைத்து விடப்போகிறது முஸம்மிலுக்கு?

✔️முஸம்மிலுக்கு அந்தளவு என்னதான் குற்றம் செய்தது; இந்த முஸ்லிம் சமூகம்?

இந்த நாட்டில் வாழும் 02 மில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சாபத்தை தவிர - இவருக்கு எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என மனம் பிரார்த்தனை செய்கிறது.

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்

- ஏ.எல். தவம் -

16 கருத்துரைகள்:

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முஸம்மில் என்கிற இவனுடைய பெயர் மட்டும் தான் முஸ்லிம். மற்றபடி இவனிடம் இஸ்லாம் சிறுவயதிலிருந்து இல்லை. இவனை போன்றவர்கள் செத்தாலும் எரிக்கப்பட தான் போகிறார்கள் அதனாலே அதற்கு ஆதரவாக பேசுகின்றான். ஆகவே இவனை முஸ்லிம் என்கிற இடத்தில் வைத்துப்பார்க்க வேண்டாம். முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு இவன் செய்யும் அநியாயங்களுக்கு இவன் இழிவை இவ்வுலகிலேயே பெற்றுக்கொள்வான்

அவர் ஒரு முஸ்லிம் என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது தவம் அவர்களே.அவர் தற்போது இருக்கும் இனவாத கட்சியில் கொடுத்திருக்கும் வேலைத்திட்டத்தை சரியாக செய்வதுதான் அவரின் பணி.அத்தோடு பணமும் கிடைக்கிறது.எனவே அவர் முஸ்லிமாக ஈமானுடன் வாழ்கிராரா? அல்லது மதம் மாறி விட்டாரா எனவும் சந்தேகம் உள்ளது.எனவே இவர் போல் உள்ள சந்தேகத்துக்குரிய துரோகிகலை நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை.அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் போதுமானவன்.

அவன் தனக்கான இடத்தை நரகத்தில் தேடுகிறான் நிச்சயமாக கிடைக்கும்..

இவர் இனவாதிகளினால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு துரோகி.இவர் போன்ற இன்னும் பலர் நம்மில் பெயர் தாங்கி முஸ்லிமாக இருக்கிறார்கள்.இவர்களை அந்த உலமா சபைகள் அழைத்து அவர்களுக்கு இஸ்லாமிய நல்ல விடயங்களை விளக்க வேண்டும்.

Allah will forgive everything but sirk, but it seems he has taken wimal as his protector. Who can help him don't be sad have pity on him.

Allah will forgive everything but sirk, but it seems he has taken wimal as his protector. Who can help him don't be sad have pity on him.

Nothing to worry since he is a Muslim only by name. D

He [Musammil] is an idiot. Don't waste time on him.

அவர் முஸ்லிம் என்று யார் சொன்னது

Basicall He is not a Muslim. Muzammil name is not muslim. It is arabic name only.

முடியும் மூளையும் இல்லா முட்டாள் இவன்.

ஒரு கட்சிக்கு சார்பாக உளவு வேலை பார்த்து ஒரு முஸ்லீம் எம்.பி ஐ நாட்டை விட்டு துரத்திய கூத்தாடி .

சகோதரர்களே... ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அவருடைய பெயர் முஸம்மில் என்பதற்க்காக அவர் எமது சமுகத்தை சார்ந்தவர் அல்ல!

சகோதரர்களே... ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அவருடைய பெயர் முஸம்மில் என்பதற்க்காக அவர் எமது சமுகத்தை சார்ந்தவர் அல்ல!

Wethanay wethanay waalawe pudikkala......naatula irikkawe pudukkala

Post a comment