Header Ads



தேர்தல்களுக்கு எதிர்க்கட்சி அஞ்சுகின்றது, கொரோனா பரவுகையினை தவிர்ப்பது சிரமம் - நாமல்

நாடாளுமன்றைக் கூட்டி பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்றைய தினம் -21- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

சில அரசியல் கட்சிகளின் தலைவர்களதும் வேட்பாளர்களினதும் செயற்பாடுகளினால் தேர்தல் நடாத்துவதனால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு.

தேர்தலை நடாத்துவதற்கான தினத்தை தீர்மானிக்கும் பூரண அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு.

அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கொரோனா தொற்று பரவுவதனை தடுக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் பிரச்சாரத்தை முன்னெடுக்க தெரிந்து கொள்ள வேண்டும்.

இதனை தேர்தல் ஆணையாளரினால் மேற்கொள்ள முடியாது.ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திய போது சிலரின் செயற்பாடுகளை பார்த்தால், கொரோனா பரவுகையினை தவிர்ப்பது சிரமம் என்பதனை நாம் புரிந்து கொண்டோம்.

வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரிச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

கொரியா போன்ற நாட்டில் கொரோனா நோய் தொற்று மிகவும் மோசமான முறையில் தாக்கியது, எனினும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது.தேர்தல்களுக்கு எதிர்க்கட்சி அஞ்சுகின்றது.

கொரோனா நோய் தொற்று பரவியது முதல் எதிர்க்கட்சியினர் உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Under any circumstances, Sri Lanka cannot be compared with Korea as the people of Korea is well disciplined and organized, unlike ours who are noting but most of the time they behaved like beasts, if Covid 19 begin t to spread in the country, doctors and the govt. authorities are helpless to see the tens and hundreds of people die due to the covid 19. Our doctors and health specialists repeatedly warned to avoid such fate befallen on the innocent people. So all of us listen to and follow the instructions of the health authorities and the chairman of the Election commission.

    ReplyDelete

Powered by Blogger.