Header Ads



கொரோனாவுக்கு எதிரான போராட்டம், சிரியாவில் பணியாற்றுவதை விட கொடூரமானது - மருத்துவரின் அனுபவம்

சிரியா உள்ளிட்ட நாடுகளில் போர் சூழலில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர், கொரோனாவுக்கு எதிராக போராடுவது மிகவும் கொடூரமானது என தெரிவித்துள்ளார்.

சிரியாவின் அலெப்போ நகரில் சிறார்கள் வெடிகுண்டுகளுக்கு இலக்காவதை பார்ப்பது போல உள்ள தற்போதைய கொரோனா சூழல் என
தெரிவித்துள்ளார் மருத்துவர் டேவிட் நாட்.

23 ஆண்டுகள் செல்சி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைகளில் பணியாற்றி அனுபவம் மிக்க மருத்துவர் டேவிட் நாட்,

ஆண்டுக்கு சில காலம் போர் சூழல் மிகுந்த பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பணியாற்றி வருகிறார்.

தாம் சந்தித்த மிகக் கொடூரமாக எதிரிகளில் கொரோனாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள டேவிட் நாட், மருத்துவமனை ஊழியர்கள் பலரும் தற்போது ஒருவகையான மன அழுத்தம் தொடர்பான நோயில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக போராடும் செவிலியர்களை உண்மையான ஹீரோக்கள் என புகழ்பாடிய மருத்துவர் டேவிட் நாட்,

நாளுக்கு 13 மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளை பராமரிப்பதும்,

முகத்தில் முகக்கவசங்களை அணிந்துகொள்வது மிகவும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் அதை பயன்படுத்துவது என, தம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது என்கிறார் டேவிட் நாட்.

மக்கள் மிகவும் கடினமாக உழைப்பதை இதுபோன்று நான் பார்த்ததில்லை எனக் கூறும் அவர்,

ஒவ்வொரு நோயாளியும் தங்கள் நோய்களில் இருந்து விடுதலைப் பெற மிகவும் ஆசைப்படுகிறார்கள், ஆனால் சில நேரம் நோய் அவர்களை வென்று விடுகிறது என்றார் மருத்துவர் டேவிட் நாட்.

1 comment:

  1. மேற்படி டாக்டர் கூறும் கருத்துக்களை நாம் மிகவும் அவதானமாக கருத்தில் எடுக்க வேண்டும். நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வது போல் இந்த நாட்டில் மருத்துவத் துறையில் குறிப்பாக கொரோனா நோய் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதில் முன்னின்று உழைக்கும் டாக்டர்கள்,தாதிமார்,உதவி தாதிமார்,ஆண் தாதிகள் உற்பட மருத்துவத்துறையில் உள்ள அத்தனை பேருடைய வீடுகளுக்கும் நாம் சென்று அவர்களுக்கு அவசியமான குறிப்பாக உலர் உணவு மற்றும் அவசியமானவற்றை வழங்க தனியாகவோ கூட்டாகவோ இயக்கங்கள்,நிறுவனங்கள் உடனடியாக முன்வர வேண்டும். அவர்கள் செய்யும் தியாகம் காரணமாகவே இந்த நோய் இலங்கையில் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரம் அவர்களுடைய மனஅழுத்தம்,மனரீதியான குறைபாடுகள் வராமல் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அரசாங்கத்தின் மட்டுமல்ல சமூகங்களின் கண்டிப்பான கடமையாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் பாரதூரமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.