Header Ads



கொரோனா கட்டுப்பாடுகளால், தலைநகரையே மாற்றும் சுவிட்சர்லாந்து


கொரோனாவின் தாக்கம் சுவிட்சர்லாந்தில் தலைநகரையே மாற்றும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.

ஆம், சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னிலிருந்து லூசேர்னுக்கு மாற்றப்பட உள்ளது, தற்காலிகமாக! சுவிஸ் தேசிய நாடாளுமன்றம் கோடைக்கால கூட்டத்தொடருக்காக ஜூன் மாதத்தில் கூட இருக்கிறது.

ஆனால், அதிகாரப்பூர்வ சமூக விலகல் விதிகள் அமுலில் இருக்கும் நிலையில், பெர்ன் நாடாளுமன்றத்தில் கூடம் கூடுவது இயலாத காரியம்.

ஏனென்றால் சமூக விலகல் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200 பேரில், 41 பேர்தான் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையவே முடியும்.

லூசேர்னிலுள்ள பொருட்காட்சி மையம் மிகப்பெரியது என்பதால், சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் நாடாளுமன்ற கூட்டம் நடத்த அது உகந்ததாக இருக்கும்.

ஆகவே, லூசேர்ன் நகரம் 21 நாட்களுக்கு மட்டும் தற்காலிக தலைநகரமாக உள்ளது.

இதனால், கொரோனாவால் பொலிவிழந்துபோன லூசேர்னின் உணவக தொழில் துறை செழிக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

உண்மையில், லூசேர்ன் நகரம் சுவிட்சர்லாந்தின் தலைநகராவது இது முதல் முறையல்ல. 1798ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்துக்குள் நெப்போலியனின் படைகள் நுழைந்தபோது, லூசேர்ன் நகரம் சுவிட்சர்லாந்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

அதன் பின், 1799ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் அதிகாரப்பூர்வ தலைமையகமான பெர்ன் நகர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.