Header Ads



அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் - ஈரான்

ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நடந்துகொண்டால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கப்பல்கள்களுக்கு அச்சுறுத்தும்விதமாக நடந்துகொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் அதன் கடற்படைக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய சலாமி, எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையாற்றுவோம்.

அவர்களுக்கு எங்களின் வலிமைப் பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என கருதுகிறோம் என்றார்.

1 comment:

  1. இவர்க சொல்லுவார்கள் சொல்லுவார்கள் மீண்டும் சொல்லுவார்கள் ஆனால் செய்யமாட்டார்கள் காரணம் இவர்கள் ஆயுதம் கண்டு பிடிப்பதும்,செய்வதும் முஸ்லீம் நாடுகளுக்கு அடிப்பதட்குத்தான்

    ReplyDelete

Powered by Blogger.