Header Ads



ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிக்க, சீனா போட்ட திட்டமே கொரோனா வைரஸ்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க சீனா போட்ட திட்டமே கொரோனா வைரஸ் தொற்று என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப்,

“அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும்.

அதற்கு கொரோனா தொற்று பரவலை சீனா கையாண்ட விதமே சாட்சி.

சீனா மீது வர்த்தக போரை தொடுத்ததால், என்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புகிறது.

சீனா பல விதமான எதிர்வினைகளை சந்திக்க இருக்கிறது. என்னால் பல காரியங்களை செய்ய முடியும்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மற்ற நாடுகளை விட, அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்து வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா விவகாரத்தில் சீனா மீது கடுமையான விமர்சனங்களையும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறி வருகிறார்.

மேலும், அமெரிக்கா சார்பில், கொரோனா பாதிப்புக்கு பல டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டஈடு கேட்டு, சீனா மீது இரு வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Hope Americans will no more select a leader who guide them to drink hand senitizer...

    ReplyDelete
  2. தலை சரியில்லாத சனாதிபதி உலகில் முதல் வல்லரசு நாட்டை ஆள்கின்றார் என்பது கின்னஸ் புத்தகத்தில் பதியப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.