Header Ads



ஜனாதிபதி நிறுவிய நிதியத்திற்கு, நாமும் பங்களிப்புச் செய்வோம்

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர்.

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக பணிகளை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதிநிதியத்திலிருந்து இந்நிதியத்திற்காக 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கமுடைய விசேட கணக்கிற்கு அன்பளிப்புகள் வரவு வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்களும் இக்கணக்கிற்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.  சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

'சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின்' முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நிதி மற்றும் வங்கித் துறையின் உயர் திறன்களுடன் தொழில்வல்லுனர்களைக் கொண்ட பணிக்குழாம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கித் தலைவர்கள் முகாமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய, சர்வதேச நிறுவனங்களும் நிதியத்திற்கு பங்களிப்பதன் மூலம் சுகாதார, சமூக பாதுகாப்பை வலுப்படுத்த பங்காளர்களாவதற்கும் மனிதாபிமான பணியின் மூலம் அனைத்து பிரஜைகளையும் கவனிக்கவும் கிடைத்த விசேட சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. No five cents from me.

    ReplyDelete
  2. அப்துல் இவ்வாறான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.