Header Ads



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அனுதாப அறிக்கை


கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் மிலேச்சத்தனமான  குண்டுத் தாக்குதலினால் பல அப்பாவி கிருஸ்தவ மக்களின் உயிர் காவு வாங்கப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியான நிலையில் இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் உள்ளத்தில் மறக்க முடியாத வடுவாக உள்ளது. நினைக்கும் போதே உள்ளம் கனக்கிறது. 

அந்த தாக்குதலில் பழியானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு இறைவன் மன நிம்மதியை வழங்க வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் இஸ்லாத்திற்கு எந்த வித தொடர்புமில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கின்றோம்.

இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவதாகும் என்பது நபிமொழி.

ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்" என்றும், "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"

[அல்குர்ஆன் 5:32]

இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை தூண்டும் மார்க்கமல்ல.
இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்த இந்த மிருகத்தனமான செயலுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதையும் மீண்டும் பதிவு செய்கிறோம்.

இது போன்ற ஒரு செயல் உலகில் எங்கும் யார் வழியாகவும் நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இப்படிக்கு,
S.K ஷிஹான்
செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

1 comment:

  1. neegalum anudafam padureegela super.iniyum emadu samuhaththayum nattayum pririkkame iruga

    ReplyDelete

Powered by Blogger.