Header Ads



காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் - தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உடல் தகனம்

காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழந்தவரின் சடலத்தை முத்திரையிட்டு, பொது சுகாதார பணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ், சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய 24 மணி நேரததிற்குள் தகனம் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் மகன் தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதுடன் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை பார்க்க வந்து சென்றுள்ளார். இதனால், தந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அப்போது அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை.

எனினும் உயிரிழந்த நபரின் சளியை பரிசோதனை செய்வற்காக அதனை விசேட சட்ட வைத்திய அதிகாரி யு.சீ.பி. பெரேரா பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரியுடன் கலந்துரையாடிய சட்ட வைத்திய அதிகாரி, உயிரிழந்தவரின் சடலத்தை சர்வதேச தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைய மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சடலம் இன்று முற்பகல் காலி தெடெல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி மஹேஷ் தர்மரத்ன தெரிவித்துள்ளார். காரப்பிட்டிய வைத்தியசாலையின் 37 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.