Header Ads



கொழும்பில் அனைத்து தோட்டங்களிலும் உள்ளவர்களுக்கு பரிசோதனை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், சமூக தொற்று பரவல் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் உள்ளவர்களை கொரோனா வைரஸ் தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் கொழும்பு மாநகர சபைடின் பிரதான வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுடனான விஷேட கலந்துரையாடலின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அடையாளம் காணப்ப்ட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் , 15 பேர்ச் நிலப்பரப்பில் 200 பேர் வரை வசித்துள்ளனர்.

அதில் சிகிசை அலங்கார நிலையம் வேறு இருந்துள்ளது. அங்கு வசித்தவர்கள் அப்பகுதி தோட்டங்களில் உள்ளவர்களுடன் மட்டுமல்லாமல், அதனை அண்டிய பல பகுதிகளில் உள்ளோருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் அதிக மக்கள் குறைந்த இடப்பரப்பில் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ள சூழலில் கொரோனா தொற்று பரவுவதற்கான சூழல் அதிகமாகும்.

எனவே இந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி கொழும்பில் எழுமாறாக கொரோனா குறித்து பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

இதில் குறிப்பாக, கொழும்பில் தோட்டங்கள் என அறியப்படும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை மையப்படுத்தி இந்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளது. ' என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

1 comment:

  1. "15 பேர்ச் நிலப்பரப்பில் 200 பேர் வசித்துள்ளனர் " என்பதை குற்றமாக பார்க்காமல் அவர்கள் எவ்வளவு மோசமான வாழ்வாதாரத்தோடு இதுவரை வாழ்ந்துள்ளனர் என்பதை கவனத்தில் கொண்டு, இவ்வாறான வாழ்வாதாரங்களை கொண்டு வாழும் எத்தனையோ குடும்பங்கள் கொழும்பு பகுதியில் இருப்பதால் அவர்களுக்கு குறைந்தது நடுத்தர வசதியுடன் கூடிய வாழ்விடங்களை அமைத்து கொடுப்பது அரசின் கடமையாகிறது.

    ReplyDelete

Powered by Blogger.