Header Ads



ரம்ஸி ராஸிக்கின் கைதினை வன்மையாக கண்டிக்கிறேன் - முஜிபுர் ரஹ்மான்

(ஐ. ஏ. காதிர் கான்)

   அரச, தனியார் ஊடகங்களின் சில ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் பகிரங்கமாகவே இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், இனவாதத்திற்கு எதிராக போராடும் ஒரு சமூக ஊடக செயற்பாட்டாளரைக் கைது செய்துள்ளமை அரசாங்கத்தின் மிகவும் மோசமான செயற்பாடு ஆகும் என்று, முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

   தொடர்ச்சியாக முகநூலில் சிங்கள மொழி மூலம் இனவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த சகோதரர் ரம்ஸி ராஸிக்,

தனது பதிவொன்றில் சிந்தனா ரீதியிலான போராட்டத்திற்கு, "சிந்தனா ஜிஹாத்" என்று குறிப்பிட்டிருந்தார். "ஜிஹாத்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காகவே அவர் ICCPR இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
   இது, அவரைத் தண்டிப்பதற்காகவேண்டுமென்றேமேற்கொள்ளப்பட்ட விடயமாகக்  கருதவேண்டியுள்ளது. ஆகவே, ரம்ஸி ராஸிக்  கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக்  கண்டிப்பதாகவும்  முஜிபுர் ரஹ்மான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.