Header Ads



கடற்பரப்பால் உள்நுழைய முயன்றால், அவர்களை தனியான தீவில் தனிமைப்படுத்த திட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவில் "கொவிட் 19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியர்கள் எந்த வழிகளிலும் இலங்கைக்கு நுழையாத்திருக்க  இலங்கையின் வடக்கு கடல் எல்லையை பலப்படுத்த கடற்படை  நடவடிக்கை எடுத்துள்ளது.

இச் சூழலில், அவ்வாறு எவரேனும் நாட்டுக்குள் உள் நுழைய முயன்று கைதுசெய்யப்பட்டால் அவர்களை தனிமைபப்டுத்த வடக்கில் தனியான தீவொன்று  வேறு படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா தெரிவித்தார்.

 இந் நிலையில் யாழ். பாலைத் தீவில் தற்போது, தற்கலைக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அங்கு சி.சி.ரி.வி.களும் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும்   அவ்வாறு கைது செய்யபப்டுபவர்கள் அந்த தீவில்  தனிமைப்படுத்தப்படலாம் என கடற்படைத் தளபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள்  தெரிவித்தன.

'  "கொவிட் 19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் மோசமான நிலைமையை அடுத்து  இலங்கையின் கடல் எல்லையை பலப்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாலர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவில் இவ்வாறான நோயாளர்கள் அதிகரிப்பின் விளைவாக கடல் மார்க்கமாக அவர்கள் இலங்கைக்கு தப்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. 

எனவே இலங்கையின் வடக்கு கடல் எல்லையே மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதால் வடக்கு கடல் எல்லை உள்ளிட்ட நாட்டின் சகல பக்கமும் கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 'என அண்மையில் கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா பிரசித்தமாக அறிவித்திருந்தார். 

இந் நிலையிலேயே அவ்வாறு எவரேனும்  எல்லை மீறி வந்தால் அவர்களைக் கைது செய்து தனிமைபப்டுத்துவதற்கான  திட்டங்களும் தற்போது தயார்ச் செய்யப்பட்டுள்ளன.

 இந் நிலையில் இலங்கையின் கடல் எல்லைகளை கண்கானிக்க கடற்படை மேற்பார்வை கப்பல்களுக்கு மேலதிகமாக விமானப்படையின் 6 விஷேட கண்கானிப்பு விமானங்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments

Powered by Blogger.