Header Ads



இலங்கையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெறுமா...?


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்த தயாராகவிருப்பதாக இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.

மே மாதம் 03 ஆம் திகதி வரையான இந்தியாவின் நாடு தழுவிய பூட்டல் நடவடிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரை பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் தொடரை ஒத்திவைத்தது.

இந் நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதொடர்பான செய்தியொன்று சிங்கள ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அத்துடன் அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்தால் இலங்கையின் இந்த முன்மொழிவு தொடர்பில் இந்தியா ஆராயும் என்றும் அவர் குறித்த சிங்கள பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறிய அவர், 

ஐ.பி.எல். நிறுத்தப்பட்டால், இந்திய கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஐ.பி.எல். பங்குதாரர்கள் 500 மில்லியனுக்கும் அதிகமான இழப்பைச் சந்திக்க நேரிடும்.

எனவே, 2009 இல் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் செய்ததைப் போல் பிரிதொரு நாட்டில் லீக் தொடரை நடத்துவது அவர்களுக்கு நன்மை பயக்கும் ”.

இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முன்னேற்றகரமான பதிலினை அளித்தால் இலங்கை சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. நோய் தொற்றில நாடு எப்படி அழிந்து போனாலும் தாங்க சம்பாதித்தா சரி...

    ReplyDelete
  2. This guy try to bring COVID-19 to Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.