Header Ads



உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளை, மன்னிப்பதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்தது


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளை மன்னிப்பதாக இலங்கை கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டவர்களை மன்னித்து விட்டதாக கத்தோலிக்க தேவாலயம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான இன்றைய தினம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனையின் போது, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலைமை காரணமாக தொலைக்காட்சி ஊடாகவே இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு ஆராதனை நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“எம்மை அழித்துவிட நினைத்த எதிர்கள் மீது நாம் அன்பு செலுத்துகின்றோம்” என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியவர்களை மன்னித்து விட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


5 comments:

  1. ONLY GOD ALMIGHTY CAN PARDON THEM!

    ReplyDelete
  2. It is an act of highest dignitaries to pardon all wrong-doers, and embrace them. It is the highest culture of these dignitaries to honour the community. These are the ethics that history has shown us.
    பெருந் தவறுகளையும் மன்னித்து அவரகளை அரவணைப்பது மாண்புடையோரின் செயல். அவற்றிற்கு மதிப்பும் கண்ணியமும் அளித்து அவரகளுடன் ஒன்று சேர நடந்து சமூகத்திற்கு வழிகாட்டியாக இருப்பது மாண்புடையோரின் உயர்ந்த பண்பாடு. இவை வரலாறு நமக்கு காட்டித்தரும் ஒழுக்கவியல்.

    ReplyDelete
  3. What about your opinion next?

    ReplyDelete
  4. செய்தவன், தூண்டியவன், வழிகாட்டியவன்...கேடுகெட்ட துரோகிகள்.. ஒரு உயிரை கொள்வதற்கு எந்தவொரு மார்க்கமும் அனுமதிப்பதில்லை மாறாக இது தெளிவான மன்னிக்கமுடியாத குற்றமாகும் என்பதையே தெளிவாகக் கூறுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.