Header Ads



அதிகாரத்தை கைப்பற்ற, சுமந்திரன் சூழ்ச்சி - பேராசியர் சன்ன ஜயசுமன

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில விடயங்களை பயன்படுத்தி நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கி, அதிகாரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாராகி வருவதால், அதனை தடுப்பதற்காக தற்போது தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பேராசியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த திகதியை நிர்ணயித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சவாலுக்கு உட்படுத்தி பல்வேறு தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோயை அவர்கள் இதற்கான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர்.

நோயாளிகள், நாட்டு மக்கள் குறித்த அக்கறையில் அவர்கள் இந்தவிடயத்தை செய்யவில்லை.அதிகார ஆசை மற்றும் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இதனை செய்கின்றனர் என்பதை தெளிவாக கூற வேண்டும்.

விடயங்களை ஆராயும் போது இந்த அரசியல் சூழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரி மற்றும் நிலைப்பாடுகளை உருவாக்கும் நபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்பது தெளிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் தேர்தல் பற்றி பேசுவது பொருத்தமற்றது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்குள் இருக்கும் அச்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்து வருகின்றனர். வைரஸ் என்ற போர்வையில் சுமந்திரன் உட்பட குழுவினர் மேற்கொள்ளும் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும்.

மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மூன்று மாதத்திற்குள் கூட்ட வேண்டும் என்றும் ஷரத்தை பயன்படுத்தி சவாலுக்கு உட்படுத்த இவர்கள் தயாராகி வருவது தெரிகிறது.

இதற்கு தேவையான சூழ்நிலையை சுமந்திரன் உருவாக்கி வருகிறார். அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்திய அரசியல்வாதி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு நிலைப்பாட்டை உருவாக்கினார் எனவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த சன்ன ஜயசுமன எனும் மனிதர் மிகப் பெறும் பொய்யர்,படித்த பேராசிரியர் எனும் சொல்லுக்கு ஒரு மிகப் பெரும் களங்கம் இவர்.முட்டாள்கள் கூட நம்பாத விடயத்தை கூட இவர் உண்மை என கூறி இனவாதத்தை இலகுவாக மக்கள் மத்தியில் பரவச்செய்பவர்.

    ReplyDelete
  2. இலங்கை ஒன்றும் தென் துருவத்தில் இல்லை என்பதையும் இத்தகைய வெற்று மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டிய சூழலில் தமிழ் மக்கள் இல்லை என்பதையும் யாராவது பிதற்றும் இந்த சன்னி பேராசிரியருக்கு சொல்லவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.