Header Ads



தேர்தல் ஆணைக்குழு எடுக்கும், தீர்மானத்துக்கமைய அரசாங்கம் செயற்படும் - பிரதமர் மஹிந்த

தேர்தல் சட்டத்தை மீறி செயற்பட முடியாதென்பதால் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் செயற்படுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவையாவன,

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கபடுமே தவிர, அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படாதென, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு செல்ல தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தால் அதற்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கபடும் ஆட்சி சிறந்ததால் தேர்தல் அவசியமில்லையென பலரும் கருத்துத் தெரிவிப்பதாகவும் யார் என்ன கூறினாலும் தேர்தல் சட்டத்தை மீறி செயற்பட முடியாதென்பதால் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் செயற்படுமென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இதனை பொதுமக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.நாம் யாருக்கும் பலவந்தம்,அம்மணவார்த்தைகளைப் பிரயோகி்ப்பதில்லை. தேர்தல் ஆணைக்குழு விரும்பியதைச் சொல்லவோ,செய்யவோ அதிகாரம் கொண்டது.அது எதனைச் சொல்கிறதோ, எங்களுக்கு எதனைக் கட்டளையிடுகின்றார்களோ அதனை மாத்திரம் அரசாங்கம் செய்யும்.அது தவிர சிலர் கூறுவது போல் நாம், அம்மண வார்த்தைகள் பாவித்து ஒருபோதும் அரச அதிகாரிகளின் மனதைப் புண்படுத்தமாட்டோம். அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. Every day belty.no policy for you.

    ReplyDelete

Powered by Blogger.