April 16, 2020

உடல்கள் எரிப்பு - முஸ்லிம் வைத்தியர்கள், தமது பங்களிப்பை சரியாக செய்தார்களா...?


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

'முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்' என்பர். எரிப்பது சம்பந்தமான விடயத்தில் அரசுக்கு விளக்கம் கொடுப்பது வைத்தியர்களின் சங்கமும், வைத்தியத்துறையுடன் சம்பந்தப்பட்ட சுகாதார உயர் அதிகாரிகளுமே. இவர்களின் அபிப்பிராயப்படியே எரிப்பது தான் மிகவும் பொருத்தமானது  பாதுகாப்பானது என்ற முடிவை அரசு எடுத்தது. அரசின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் இனவாத நோக்கில் நாம் பார்ப்போம் எனில் எல்லாமே பிழையாகத்தான் தெரியும்.

 வைத்தியத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் அபிப்பிராயம் இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் கொரோனா அழிப்பில் முன்வரிசை போராளிகளாக இருப்பது அவர்களே. எனது நண்பன் நளீர் அவர்கள்  அடிக்கடி என்னிடம் கூறும் ஒரு விடயம் இந்த விடயத்தில் வைத்திய துறையுடன் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் தமது பங்களிப்பை சரியாக செலுத்த வில்லை என்பதே.

ஏனெனில்  யார் என்ன சொன்னாலும் குறிப்பிட்ட துறையில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய விளக்கத்தை கொடுத்து இருந்தால் இதில் வேறுவிதமான முடிவு வந்து இருக்கலாம் என்பதே அவரின் அபிப்பிராயம். இது சம்பந்தமாக சமூகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் என்னுடன் பலமுறை தர்க்கித்தார்.

இதில் ஓரளவு உண்மையும் இருக்கின்றது சட்டப் பிரச்சினை என்றால் சட்டத்துறையில் சம்பந்தப்பட்டவர்களின் அபிப்பிராயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே உலமாக்களும் அரசியல்வாதிகளும்,சட்டத்தரணிகளும், வேறு சமூக நலன் விரும்பிகளும் இந்த விடயத்தில் என்ன விளக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்திருந்தால் ஏதேனுமொரு மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்ற விடயத்தில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. 

இந்த விடயத்தில்  சுகாதாரத்துறையைச் சார்ந்த முஸ்லிம் உயர் அதிகாரிகள்  தமது பங்களிப்பை உரிய நேரத்தில்  செலுத்தவில்லை என்ற இந்த கருத்தில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா? அல்லது அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா? அப்படி என்றால் காலம் தாழ்த்தியாவது அவ்வாறான ஒரு முயற்சி நடை பெறுகின்றது என்றால் வரவேற்கத்தக்க விடயமே.

12 கருத்துரைகள்:

ஒரு சமூகத்தின் உணர்வு சார்ந்த விடயத்தில் துறை சார்ந்த முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவு முக்கிய படுத்த பட போகின்றது. இந்த விடயத்தில் அரசியல் துறை சார்ந்த விமல் கம்மன்வல போன்றவர்கள் பிடிவாத தலையீடு ஏன் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் சட்டத்தரணி அவர்களே!! இனவாத அனுகு முறையா இல்லையா?

உண்மையான விடயம்

Yes true. But we have a big gabs in this matter. We have no experts in the special field. Example: No Virology

How we can face or give voice to this affair

Reflecting back on the events of yesterday I am saddened as to the response and how it concluded.
Our team was formidable and ably led by Prof. Vidyajothi Rizvi Sheriff, Prof. Deen, Prof.Haniffa, Prof Fernando and Prof. Ekanayaka. Myself and brother Azad Ali together with Mr. Illyas P.C. and his Assistant accompanied the team as observers. We were in the D.G.'s conference room for a little over 30 minutes when the D.G. led his team into the room.
He outlined that the meeting was at the request of Mr. Ali Sabri P.C. and wished us to state our case. Prof Sheriff having made the introductory remarks and emphasising that unlike bacteria no virus can live outside a living cell invited Prof Deen who made a very well researched and scientific submission which has prompted 182 countries to adopt the WHO. guidelines. This was followed by contributions from Prof Haniffa and others.
It was admitted by
the department doctors the virus is unknown as it's only three months. They were ofcourse attributing the low numbers of death and infection due to the strict control measures inspite of low numbers tested. None were in favour of burial. Surprisingly the vehement opposition were by two JMO s who admitted their ignorance of virology by saying " we dont know of this 3 month old virus, therefore the only option is to cremate.
I was saddened at their ignorance and their motivated hostility when they said that 20 million people will come out onto the streets to prevent burials as well as their generation to be born will fault them. They also referred to hostilities to the community due to Easter bombings and made a reference to Bio terrorism and that even a buddhist monk was not allowed to bury his non infected sister.
A hydrologist read out some articles on ground water contamination without any background data to back it .and together with a epidemiologist who added to this cacophony of fear through ignorance.
The D.G. thereafter adjourned the meeting with the conclusion that
"THIS MATTER IS TO BE REVIEWED ( no date indicated) ON THE BASIS OF EVOLVING SCIENCE".
That's how this Saga of ignorance ended with the fear of the unknown.!!
Perhaps the WHO (of which the D.G. is a Vice Chairman representing Sri Lanka) and the other 182 countries should seriously consider Srilanka as an example to follow with JMOs and not virologists and epidemiologists.
Written by Razik Zarook . Forwarded as received.

Most of physicians are looking at when can do pp, then how can think about their society?

You cannot wake a person who is pretending to sleep..

Srilankan Muslim doctors selfish. concerned only pocket...appreciate lawyers and ulamas.they aways forward when needed.

சமூகத்தை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

��✅⁉️ஜனாஸாக்களை எரிப்பதைத் தவிர்த்து அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட குழு முயற்சிகள். விபரம்!
தமிழில் Dr Ziyad Aia

Part 01

அடக்கம் செய்யும் உரிமைகளுக்கான கோரிக்கை!
சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் எடுத்த முடிவு, "COVID - 19 பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது", இது முஸ்லிம் சமூகத்தினரிடையே கடுமையான பதட்டத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் அடக்கம் செய்ய கோருவது நியாயமான கோரிக்கை என்பது விஞ்ஞான அடிப்படையானது.

அடக்கம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி அதிகாரிகளுக்கு சமூகம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைக்கிறது. குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கின்றன. உலகில் 180 நாடுகள் இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளும் அடக்கம் செய்வதை அனுமதிக்கின்றன.

இதன் விளைவாக, சமூக பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான பணிக்குழு (Task Force) உடன் தமது பக்க நியாயங்களை முன்வைக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி அடக்கம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்பதை பிரதிநிதித்துவப்படுத்த பின்வருவோர் கலந்து கொண்டனர்.

1. Prof Rezvi Sheriff
2. Prof Ravindra Ferdinando
3. Prof K I Deen
4. Prof Vajira Dissanayake
5. Dr Ruvaiz Haniffa
6. Mr Illiyas Admani PC
7. Razeek Zarook PC

இரு குழுக்களுக்கிடையேயான சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்டது, இதன் போது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவம் மிக்க உறுப்பினர்கள் தங்கள் வாதத்தை விஞ்ஞான ஆதாரங்களுடன் முன்வைத்தனர்.

✅ இந்த COVID-19 நீர் மூலம் பரவுவது அல்ல. நிலத்தில் 8 அடிக்கு கீழே அடக்கம் செய்வதால் நோய் பரவாது.
உலகில் 180 க்கு மேட்பட்ட நாடுகள் இதனை அனுமதிக்கின்றன.

✅ சமூக விலகல் வழிகாட்டுதல்களுக்கு வைரஸைத் தவிர்ப்பதற்கு ஒரு மீட்டர் தூரம் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டியில் 8 அடிக்கு அடியில் புதைக்கப்படும் போது அது பரவுவதற்கான பூஜ்ஜிய நிகழ்தகவு உள்ளது என்று அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

பணிக்குழுவின் (Task Force) உறுப்பினர்கள் தங்கள் எதிர் வாதத்துக்கு பின்வரும் 4 காரணங்களை முன்வைத்தனர்.

❌ 1. இந்த வைரஸ் பற்றி முழுமையாக தெரியாது; எனவே பரவுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.

❌ 2. இலங்கையின் நிலக்கீழ் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் ஆழமற்றது, இதனால் மாசுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

❌ 3. தகனம் என்பது வைரஸை தெளிவாக அழிப்பதால் பாதுகாப்பான வழி.

❌ 4. குழுவின் சில உறுப்பினர்கள் மருத்துவத்தையும் அறிவியலையும் தாண்டி பயங்கரவாதிகள் சடலத்தை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். புதைக்க அனுமதித்தால் 20 மில்லியன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள்.

Part 02:
�� பேராசிரியர் ஷெரிப் தமது வாதத்தில் தகனம் செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பேராசிரியர்கள் ஷெரிப் மற்றும் கமால்டீன் இருவரும் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிறரின் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளைப் பாராட்டியதோடு, அடக்கம் செய்வதற்கான அச்சத்தைத் தீர்ப்பதற்கான அறிவியல் அம்சங்களை சுட்டிக்காட்டினர்.

அதே நேரத்தில் டாக்டர் ஹனிஃபா நெறிமுறை (Ethical) அம்சங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். திரு. அலி சப்ரி சமூகத்தின் கவலையும், அடக்கம் செய்யப்படுவதற்கான உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

கலந்துரையாடல்கள் நீளமாக இருந்தன, ஆனால் தகனம் மட்டுமே என முடிவெடுப்பதற்கான காரணம் "அறியப்படாத பயம்" என IDH ன் JMO விடம் இருந்து மீண்டும் வெளிப்பட்டது. இதுவரை 7 கொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. வைரஸ் இறந்த உடலில் அல்லது தண்ணீரில் வாழ முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

⁉️ தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் geo hydrographer இருவரும் விஞ்ஞான தரவுகளை முன்வைக்காது பய உணர்வை (syndrome of fear of the unknown) மாத்திரமே காரணமாக முன்வைப்பதன் அடிப்படை என்ன என்பதை P.C. Zarook கேள்வி எழுப்பினார்.

⁉️ ஒரு நுண்ணுயிரியலாளர் (A microbiologist) 182 நாடுகள் போலல்லாது நாம் சீனாவாக இருக்க வேண்டும் அவர்களைப்போல் எரிக்க வேண்டும் என்று பரிதாபமாக விரும்பினார். அவரால் எந்த ஆதாரத்தையும் சேர்க்க முடியவில்லை, ஆனால் மீண்டும் தெரியாத பயத்தை வெளிப்படுத்தினார்.

�� பேராசிரியர் ஷெரிப்டீன், மருத்துவ நடைமுறை என்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போதும் சரி,எதிர்காலலும் சரி அது அப்படித்தான் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.

�� இன்னும் சில உறுப்பினர்கள் எரிப்பதன் மூலம் முஸ்லீம்களின் உணர்வை நசுக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டனர்.

�� கவுரவ அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நேர்மையான முறையில் பதில் அளித்தாலும் , இதுபற்றி மேலும் கலந்துரையாட விருப்பம் தெரிவித்தனர்.

⁉️ JMO விஞ்ஞான அடிப்படை இல்லாத , வெறுமனே கற்பனையான அச்ச உணர்வை வெளிப்படுத்தி எமது கோரிக்கையை எதிர்ப்பதையே அவதானிக்க முடிந்தது.

�� எல்லா அறியாமையும் வெளியேற்றப்பட வேண்டும், விரைவில் விஞ்ஞான உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

Source
https://www.facebook.com/102520121333671/posts/136214997964183/

only earning of money not come with us pl do something to your society.

Post a comment