Header Ads



நியூசிலாந்து கொரோனாவை அடித்து, நொறுக்கியுள்ளதாக பாராட்டு

கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து நாடுகளிலும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இதற்காக பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, கொரோனாவை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பெண்கள் ஆட்சி செய்யும் ஆறு நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் அந்நாட்டு பெண் தலைவர்களை பாராட்டி வருகின்றனர்.

அதில், ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் சிறப்பாக கையாண்டுள்ளன என்றும் இந்த நாடுகளுக்கு உள்ள ஒற்றுமை இந்த ஆறு நாடுகளையும் பெண்கள் தலைமைதாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்ன், கொரோனா வைரஸ் விவகாரத்தை சிறப்பாக கையாள்கிறார் என்பதை விவரிக்க வாஷிங்டன் போஸ்ட் தலைப்பை வைத்து புரிந்துகொள்ளலாம்.

அதில், நியூசிலாந்து கொரோனா வளைவை தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

கொரோனா பாதிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்தானது, ‘உங்களுக்கு கொரோனா பாதித்தது போன்று செயல்படுங்கள்’ என்பதுதான் அது.

No comments

Powered by Blogger.