Header Ads



"லொக் டவுன்" என்றால் என்ன என்பது, நாட்டு மக்களுக்கு புரியாது - விமல்

லொக் டவுன் என்றால் என்ன என்பது நாட்டு மக்களுக்கு புரியாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுவது போல் லொக் டவுன் செய்தால், கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாவை கட்டுப்படுத்த லொக் டவுன் செய்ய வேண்டும் எனவும், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தேவையில்லை எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

எமது நாட்டு மக்களுக்கு லொக் டவுன் என்றால் என்னவென்று புரியாது. ஊரடங்குச் சட்டம் என்றால் மக்களுக்கு புரியும்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி அதனை மீறிய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் உள்ளனர்.

லொக் டவுன் போன்ற தெரியாதவற்றை செய்தால், தொற்று நோய் பரவுமே அன்றி வேறு எதுவும் நடக்காது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Ivar miha periya methaaavi....enga padittaro...!!!!

    ReplyDelete

Powered by Blogger.