Header Ads



சீனாவில் இறைச்சிக்கான விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகை நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் தோன்றியது. அங்குள்ள ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

விலங்கு இறைச்சி விற்பனை

பன்றி, கோழி, ஆடு, மாடு, மான், தீக்கோழி மற்றும் ஒட்டக இனத்தைச் சேர்ந்த அல்பாகா உள்ளிட்ட 13 விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றையும் வளர்க்கலாம், ஆனால் அவற்றை இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு காரணமாக நம்பப்படும் எறும்பு தின்னி, வவ்வால்கள் போன்றவை பட்டியலில் இல்லை. அதேபோல் இந்த பட்டியலில் நாய் இனங்களும் இல்லை.

No comments

Powered by Blogger.